கணவரால் காஜல் தனது திரை வாழ்க்கையில் அகர்வால் எடுத்த திடீர் முடிவு. அப்போ அவ்ளோ தானா ?

0
1256
kajal
- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை பற்றி கேட்ட ரசிகருக்கு காஜல் அகர்வால் பதில் கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

கடந்த வருடம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.மேலும், சமீப காலமாக சோசியல் மீடியாவில் காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு நபருடன் நெருங்கிய உறவில் இருக்கிறார் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் ஊர் பயணங்கள் செல்கிறார் என்றும் அவரைப் பற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இதையும் பாருங்க : சின்ன பையன்னு நெனச்சீங்களா ? திருமணம் ஆகி ஒரு குழந்தையே இருக்கு. அதுவும் இவரது மனைவி திரௌபதி பட நடிகை தெரியுமா ?

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் காஜல் அகர்வால். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சினிமாவை விட்டு விலகப்போகிறார்களா என்று கேட்ருந்தார்.

kajal

அதற்கு பதில் அளித்த காஜல், நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி சொன்னால் நடிப்பதை விட்டு விடுவேன். தற்போது எனது கணவரும், குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார. தற்போது காஜல் அகர்வால் வசம் ஹேய் சினாமிகா, கமல்ஹாசனின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா, கோஷ்டி போன்ற படங்கள் உள்ளன. 

-விளம்பரம்-
Advertisement