சின்ன பையன்னு நெனச்சீங்களா ? திருமணம் ஆகி ஒரு குழந்தையே இருக்கு. அதுவும் இவரது மனைவி திரௌபதி பட நடிகை தெரியுமா ?

0
42645
udhaya
- Advertisement -

தமிழ் திரையுலகில் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த ‘ஆயுதம், திருடா திருடி’ ஆகிய இரண்டு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் நடிகர் உதய் ராஜ். இதில் ‘ஆயுதம்’ படத்தில் ஹீரோவாக ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்தும், ‘திருடா திருடி’ படத்தில் கதாநாயகனாக தனுஷும் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ‘தளபதி’ விஜய் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு நடிகர் உதய் ராஜுக்கு கிடைத்தது. ஆம்.. அந்த படம் தான் ‘திருமலை’.

-விளம்பரம்-

இந்த படத்தினை பிரபல இயக்குநர் ரமணா இயக்கியிருந்தார். இதில் நடிகர் உதய் ராஜ் குழந்தை நட்சத்திரமாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ‘திருமலை’ படத்துக்கு பிறகு 2010-ஆம் ஆண்டு வெளி வந்த ‘பாணா காத்தாடி’ படத்தில் உதய் ராஜ் நடித்திருந்தார். அதில் அதர்வா, சமந்தா ஜோடியாக நடித்திருந்தனர். அதர்வாவின் நண்பராக உதய் ராஜ் வலம் வந்திருந்தார்.

இதையும் பாருங்க : 45 டாக்டர் செத்துட்டாங்க, உங்களாக கறி சாப்பிடாம இருக்க முடியாதா – நர்ஸ் வெளியிட்ட கண்ணீர் வீடியோ. மாதவன் கேட்ட மன்னிப்பு.

- Advertisement -

கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த கார்த்தியின் ‘கைதி’ படத்திலும், உதய் ராஜ் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் உதய் ராஜின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் , சமூக வலைத்தளமான ட்விட்டரில் என்ட்ரியாகியிருக்கி இருந்தார் நடிகர் உதய் ராஜ். அவரின் முதல் ஸ்டேட்டஸ் ‘தளபதி’ விஜய் பற்றியது தான்.

இவரை பலரும் சின்னப்பையன் என்று தான் நினைத்து வருகின்றனர். ஆனால், இவருக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தையே இருக்கிறது. அதுவும் இவரது மனைவி திரௌபதி படத்தில் நடித்த நடிகை என்பது தான் வியப்பான விஷயம். திரௌபதி படத்தில் நாயகியின் தங்கையாக நடித்த ஜனனி என்பவரை தான் உதயா திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement