‘என் அம்மா பக்கத்துல இருக்கும் போதே இப்படி பண்ணுவாரு’ – மிகப்பெரிய இசையமைப்பாளர் மீது கல்யாணி வைத்த பகீர் குற்றச்சாட்டு

0
2108
kalyani
- Advertisement -

ஒரு காலத்தில் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் கல்யாணி. இவர் அள்ளித்தந்த வானம் படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் குருவம்மா, ரமணா, ஜெயம் போன்று பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக கல்யாணி நடித்து வந்தார். மேலும், இவர் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டும் இல்லாமல் பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.
பின் இவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு கல்யாணி பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் அவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசிய இருந்தார். அதில் கல்யாணி கூறியது, ஒரு பெரிய ஹீரோ ,பெரிய தயாரிப்பாளர் போன்றவர்களின் பெரிய பட வாய்ப்பு வந்தது. ஆனால், அவர்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ள சொன்னதால் அந்த பட வாய்ப்பை நிராகரித்து விட்டேன். பின் இனி படங்களில் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்து விட்டேன். சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு நோ சொல்லிவிட்டு டிவி பக்கம் போனேன்.

- Advertisement -

கல்யாணி அளித்த பேட்டி:

அங்கு ஒருத்தன் சீண்டினான். போங்கடா, என்று அங்கும் டாட்டா காட்டிவிட்டு வெளிநாட்டிற்கு வந்து விட்டேன். நான் ஹீரோயினியாக நடித்த போது சூட்டிங்கில் ஒரு ஆங்கிளில் படம் எடுத்துவிட்டு வெளியானபோது அதை பார்த்த போது வேறு மாதிரி காட்டி இருந்தார்கள். அப்போது தான் சினிமாவில் இப்படி எல்லாம் இருக்குமா என்று நினைத்தேன். அதன் பின்னர் பெரிய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்று சொன்னதும் அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டு டிவி பக்கம் போனேன்.

சினிமாவில் நடிக்காத காரணம்:

அங்கேயும் அதே அட்ஜஸ்ட்மெண்ட் ஆசாமிகள் தான் இருந்தார்கள். பின்னர் இரண்டிற்கும் முழுக்கு போட்டு திருமணம் செய்து கொண்டு கணவருடன் வெளிநாட்டிற்கு கிளம்பி விட்டேன். என்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி கேட்டவர்கள் பெயரை சொல்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர்களுக்கு குடும்பம் மனைவி குழந்தை இருக்கிறது அவர்கள் என்ன தவறு செய்தார்கள். அவர்களின் வாழ்க்கையில் இது பாதிக்கும் என்பதால் தான் பெயரை வெளியிட வேண்டாம் என்று உறுதி செய்தேன். இருப்பினும் இந்த பேட்டியை அவர்கள் நிச்சயம் பார்ப்பார்கள் கண்டிப்பாக அவர்களுக்கு உறுத்தும் அதுவே எனக்கு போதும் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி:

இப்படி இவர் திருமணத்திற்குப் பிறகு மீடியாவில் இருந்து விலகியிருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் மெண்டராக பங்கேற்று இருக்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கல்யாணி பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தன்னுடைய சிறுவயதில் நேர்ந்த கொடுமைகளை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, எனக்கு எட்டு வயது இருக்கும். ஒரு மியூசிக் இயக்குனர் இப்போது அவர் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக இருக்கிறார். அவர் எங்கள் குடும்பத்திற்கு நல்ல நெருங்கிய நண்பர்.

கல்யாணிக்கு நடந்த கொடுமை:

அவர் நான் தூங்கும் போது என்னை தேவை இல்லாத இடங்களில் தொடுவார். அப்போது ஒருத்தர் நம்மை தொடும் போது நமக்கு ஒரு மாதிரியாக இருக்கும். அந்த உணர்வு ஏற்படும். அப்போது நான் தூக்கம் முழித்து விடுவேன். இருந்தாலும் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பேன். அவர் தேவையில்லாமல் கைகளை என் மீது வைப்பார். அதை இப்ப நினைத்தால் கூட எனக்கு கஷ்டமாக இருக்கிறது. இதை நான் எங்கேயுமே சொன்னது இல்லை. என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொன்னதில்லை. முதல் முறையாக என் கணவரிடம் தான் இதை சொன்னேன்.

பாதிக்கப்பட்ட பெண்கள் செய்ய வேண்டியது:

டிவியில் அவருடைய நிகழ்ச்சி வந்து இருக்கும் போது அதை பார்த்து எனக்கு அந்த ஞாபகங்கள் தான் வந்தது. அப்போது தான் என்னுடைய கணவரிடம் நான் சொன்னேன். அவரும் என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு சமாதானம் சொன்னார். இப்ப நினைத்தால் கூட எனக்கு அருவருப்பாக இருக்கிறது. ஆனால், நான் வெளியில் சொல்ல சொல்ல தான் என்னுடைய பாரமெல்லாம் குறைகிறது. அதனால் இந்த மாதிரி கொடுமைகளை அனுபவித்தவர்கள் தயவுசெய்து தைரியமாக வெளியே சொல்லுங்கள். உங்களுடைய மன பாரம் குறைவதுடன் மட்டுமில்லாமல் தைரியமும் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement