தமிழ் சினிமாவில் இயக்குனரான விசு கடந்த மார்ச் உடல் நல குறைவால் காலமானது தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வயது முதிர்ச்சி காரணமாக விசு கடந்த சில வருடங்களாக டயாலிசிஸ் செய்து வந்தார். கடந்த சில காலமாக உடல் நிலை மோசமடைந்த இருந்ததால் கடந்த மார்ச் 22 ஆம் தேதி மாலை சிறுநீரகப் பிரச்சனை காரணமாக நடிகர் விசு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் இவரது சடங்கில் குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர் இந்த நிலையில் விசுவின் பல படங்களில் நடித்த நடிகையும் நடிகை உமா ரியாஸின் அம்மாவுமான கமலா காமேஷ், விசுவின் மரணம் குறித்து தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மூத்த நடிகையானகமலா காமேஷ் , 80, 90-களில் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர். 14 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே இவருக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தான் அந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் கொஞ்சம் ஓய்வில் இருந்து வந்தார். அதன் பின்னர் ஒருசில ஆண்டுகளில் குணம் அடைந்தாலும் இவருக்கு சினிமா வாய்ப்பு வரவில்லை. ஜெயபாரதி இயக்கத்தில் வெளியான குடிசை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கமலா காமேஷ்.
இதையும் பாருங்க : “மே இறுதி வரை திரையரங்குகள் திறக்கப்படாது”- அதிரடி அறிவிப்பு
அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் தான். குடிசை படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு வியந்து போன இயக்குனர் விசு இவருடைய நாடகங்களில் நடிக்க சொன்னார். தொடர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வந்த இவருக்கு விசு குடும்பம் ஒரு கடம்பம் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதனை தொடர்ந்து மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் போன்ற 6 படங்களில் விசு இவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
இந்த நிலையில் விசுவின் மறைவு குறித்து பேட்டி கொடுத்துள்ள கமலா காமேஷ், விசு என் கணவரின் நெருங்கிய நண்பர் என்பதால் எப்போதும் எங்கள் வீட்டில் தான் இருப்பார் நிறைய மேடை நாடக ஒத்திகை டிஸ்கஷன் எல்லாம் எங்கள் வீட்டில் தான் நடக்கும் அதனால் எப்போதும் வீட்டில் கச்சேரியும் சந்தோஷமாக இருக்கும் அதை நினைத்தால் இப்போதும் கண்ணீர் வருகிறது அவர் திருமணத்துக்கு பெண் பார்த்துவிட்டு சுந்தரியை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் உங்களுக்கு எப்படி படுகிறது என்று கேட்டார் அந்த அளவிற்கு இன்று எங்கள் வீட்டிற்கு நெருக்கமான ஒருவர்.
நான் கிட்டத்தட்ட 600 படங்களில் வரைக்கும் நடித்து இருக்கிறேன். ஆனால், விசு படங்கள் மூலம் தான் நான் பிரபலமானேன். விசு எனக்கு செய்த உதவியை நான் மறக்கவே மாட்டேன். ஆனால் விசுஉடைய இறப்பிற்கு என்னால் போக முடியவில்லை .இதுதான் எனக்கு மிகப்பெரிய வலியை கொடுத்தது. எனக்கு இடுப்பில் 7 முறை அறுவை சிகிச்சை நடந்து இருப்பதால் நடக்க முடியாமல் போக முடியவில்லை. அவருடைய முகத்தை பார்க்க முடியவில்லை என்று ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவருக்கு மூன்று பொண்ணுங்க ஒருத்தி துபாய் இன்னொருத்தி டெல்லியின் இருந்தாங்க எல்லோரும் இறுதி சடங்கிற்கு வந்தார்களா என்று தெரியவில்லை தெரிந்தது என்றால் யாராவது சொல்லுங்க என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார் கமலா.