வேட்டையாடு விளையாடு பட நடிகையா இது? எப்படி ஆகிட்டார் பாருங்க. இதோ புகைப்படங்கள்.

0
633
- Advertisement -

வேட்டையாடு விளையாடு பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 96தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கமலினி முகர்ஜி. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகை ரேவதி இந்தியில் இயக்கிய பிர் மிலங்கோ என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார் கமலினி முகர்ஜி.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஷில்பா ஷெட்டி, சல்மான் கான், அபிஷேக் பச்சன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் Aids நோய்யை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அதோடு சிறந்த நடிகை என்ற விருதையும் கமலினி பெற்றார். அதன் பிறகு இவர் தெலுங்கில் வெளியான ஆனந்த் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

கமலினி திரைப்பயணம்:

அதன் பின் 2006 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் கமலஹாசன், ஜோதிகா நடிப்பில் வெளிவந்திருந்த வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் கமலினி தமிழில் அறிமுகம் ஆகி இருந்தார். இந்த படத்தில் இவர் கமலின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. அது மட்டும் இல்லாமல் தமிழில் முதல் படத்தில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது.

கமலினி படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த இறைவி என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியாகியிருந்த புலி முருகன் என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

கமலினி குறித்த விவரம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் பெரிதாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒருவழியாக இவர் அமெரிக்காவில் போய் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் நடிகை கமலினி லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கமலினி லேட்டஸ்ட் புகைப்படம்:

அதாவது, சமீபத்தில் அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமலினி கலந்து கொண்டிருந்தார். அதில் பார்ப்பதற்கே அவர் கொஞ்சம் வெயிட் போட்டு அடையாளமே தெரியாத அளவிற்கு இருந்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், வேட்டையாடு விளையாடு பட நடிகையா! இவர் என்று ஷாக்கில் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement