தாய்லாந்து வரை சென்று விருது பெற்ற பிக் பாஸ் நமீதா – காரணமாக இருந்த அர்த்தநாதிஸ்வரர் கெட்டப். இதோ வீடியோ.

0
637
namitha
- Advertisement -

தாய்லாந்து வரை சென்று பிக்பாஸ் நமிதா மாரிமுத்து விருது வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது.

-விளம்பரம்-
namitha

இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருந்தார்கள். அதில் முதல் முறையாக பிக் பாஸ் வரலாற்றிலேயே திருநங்கைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரின் கவனத்தைப் பெற்றவர் திருநங்கை நமிதா மாரிமுத்து. இவர் ஃபேஷன், மாடலிங், சினிமா என அனைத்து துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

நமீதா மாரிமுத்து:

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒரு வாரத்திலேயே இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. பின் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்ததாக நமிதா மாரிமுத்து அறிவித்திருந்தார். திருநங்கை தரப்பிலிருந்து நமிதா மாரிமுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தது பலருக்கு நம்பிக்கையையும் அளித்திருந்தது.

தாய்லாந்தில் நடந்த மிஸ் பன்னாட்டு அரசி:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் ஈஸியாக அடையாளம் கண்டு கொண்டவர் நமிதா மாரிமுத்து.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். அந்த வகையில் திருநங்கைகளுக்கான மிஸ் பன்னாட்டு அரசி 2022 (MISS International Queen 2022) போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை மாரிமுத்து கலந்து கொண்டிருந்தார். முதல் 10 இடத்தில் இடம் பெற்றார். பின் இறுதி போட்டியில் “MISS POPULAR VOTE OF THE WORLD” விருதினை பெற்றார்.

-விளம்பரம்-

தங்கக்கோப்பை வென்ற நமீதா மாரிமுத்து:

இதில் அவர் சிவன், பார்வதியின் அர்த்தநாதிஸ்வரர் வேடம் அணிந்து வந்திருந்தார். மேலும், வெற்றி பெற்ற நமீதா மாரிமுத்துக்கு தங்ககோப்பை விருதும், “SASHES” எனப்படும் அங்கி அணிவிக்கப்பட்டது. இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை நமிதா மாரிமுத்து பெற்றிருக்கிறார். பின் திருநங்கை நமிதா மாரிமுத்து தான் பெற்ற விருதினை நேற்றைய தினம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. பி.கீதாஜீவன் அவர்களிடம் தலைமைச் செயலகத்தில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்:

இந்த நிகழ்வின்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ஷம்பு கல்லோலிக்கர், இ.ஆ.ப., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் திருமதி. த. ரத்னா, இ.ஆ.ப., சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் திருமதி. ச. வளர்மதி, இ.ஆ.ப., மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு இணைச் செயலாளர் திருமதி. இரா. சீத்தாலட்சுமி, இ.ஆ.ப., ஆகியோரும் உடனிருந்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகு வாழ்க்கையில் தொடர்ந்து அடுத்தடுத்த சாதனைகளை நமிதா மாரிமுத்து செய்து வருகிறார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

Advertisement