மகளுக்கு கொடிய நோய்..!அதனால் தனக்கும் இந்த நோய் வந்து விட்டது..!நடிகை காஸ்தூரி

0
1219
Kasthuri

தமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44 வயது ஆன போதிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார்.

Kasthuri

நடிகை கஸ்தூரிக்கு திருமணமாகி ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் நடிகை கஸ்தூரியின் மகளுக்கு புற்றுநோய் என்றும் மகளின் புற்று நோயை எண்ணி தானும் தூக்கம் இல்லாமல் இருந்து வந்ததால் தனக்கும் துக்கமின்மை என்ற ‘insomnia’என்ற நோய் வந்ததாகவும் கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.

இதுகுறித்து பேசிய நடிகை கஸ்தூரி, என்னுடைய பெண்ணிற்கு 7 வயசு இருக்கும் போது எப்போ பார்த்தாலும் ஜுரம் வந்துக்கிட்டே இருக்கும். ஜுரம்னு ஆஸ்பத்திரில போய் நிப்போம். ஒருநாள் சாயங்காலம், ஹாஸ்பிட்டல்ல இருந்து போன். `உங்க பொண்ணுக்கு ஹீமோகுளோபின் குறைவா இருக்கு. உடனே, வாங்க’னு சொன்னாங்க.

6 மணி நேரம் ஊசி முனைல நின்னுக்கிட்டு இருந்தோம். பிறகு, டாக்டர் வந்து, `நாங்க பயந்த மாதிரியே ஆயிடுச்சு. எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்துட்டோம். உங்க பொண்ணுக்கு`பிளட் கேன்சர்’ வந்திருக்கு’னு சொன்னாங்க. அந்த நிமிஷம் என்னோட உலகமே இடிஞ்சு விழுந்துடுச்சு. அதுக்குப் பிறகு 4 வருஷமா ஒரே போராட்டம்.

பல நாள் தூக்கமே வராது. அப்படித் தூக்கமில்லாம போனதுல எனக்கு `இன்சோம்னியா’ (Insomnia) வந்துடுச்சு. அப்போதான் எனக்கு கடவுள் மேல கோபம் வந்துச்சி. ஆனா, என் பொண்ணுக்கு ஒவ்வொரு தடவை ஊசி போடும்போதும், அவ வலியால அழும்போது அவளுக்கு நான் நம்பிக்கையைக் கொடுக்கணும்கிறதுக்கா சாமி பெயரை சொல்லி தைரியம் கொடுத்தேன். அவ கடவுள் நம்பிக்கையாலதான் அவளோட வலிகளை மறந்தா!