ஓபிஎஸ் மகன் பற்றி சர்ச்சை ட்வீட் செய்து பின்னர் நீக்கிய கஸ்தூரி.!

0
1206
Kasthuri
- Advertisement -

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா ஜ க அணி தனது பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. மற்ற மாநிலங்களில் அமோக வெற்றி பெற்ற பா ஜ க அணி தமிழகத்தில் ஆதிமுகவிடம் கூட்டணி வைத்து.

-விளம்பரம்-

ஆனால், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பா ஜ க அணி வெற்றி பெறவில்லை. இருப்பினும் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் ஆறுதல் வெற்றி பெற்றார். ரவீந்திரநாத் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே கோவில் கல்வெட்டில் அவருடைய பெயருக்கு பின்னால் எம் பி என்று அச்சடிக்கபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யணார்குளத்தில், வரும் 31ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை அதிமுகவினர் அச்சடித்துள்ளனர். இதில், ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பெயருடன்  மத்திய அமைச்சர் என அச்சடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

https://t.co/Du0o45RVni

ரவீந்தரநாத் குமார் மத்திய அமைச்சர் என அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ், சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருவகிறது அதை நடிகை கஸ்தூரி  தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்துள்ளார்.இதனால் மீண்டும் பெரும் சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் கிளம்பியுள்ளது. ஆனால், அந்த டீவீட்டை சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார் கஸ்தூரி.

-விளம்பரம்-
Advertisement