இந்த காரணத்தால் தான் 38 வயதாகியம் நான் கல்யாணம் செய்யவில்லை..? மனம்திறந்த கௌசல்யா

0
2557

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்தவர் கெளசல்யா. விஜய், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர். தற்போது பெங்களூருவில் வசித்து வருபவர், கேரக்டர் ரோல்களில் நடித்துவருகிறார்.

kousalya

- Advertisement -

நீங்க கல்யாணத்துக்குத் தயாராகியிருப்பதாக சமீபத்தில் வெளியான தகவல் உண்மையா?
(சிரிப்பவர்) ”உங்களுக்கு நான் சிங்கிளா, மேரீடானு தெரியணும் அவ்வளவுதானே. சரி சொல்றேன். நான் கல்யாணத்துக்குத் தயாராகி இருப்பதாகவும், வரன் பார்த்துகிட்டு இருப்பதாகவும் வெளியான செய்தியை படிச்சேன். ஆனா, அது உண்மையில்லை. ‘இந்த வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கணும்’ங்கிறதில் எனக்கு உடன்பாடில்லை.

இப்போ எனக்கு 38 வயசாகுது. இன்னும் சில காலம் பேச்சுலரா இருக்கவே ஆசைப்படுறேன். அந்தச் சுதந்திரத்தின் மகிழ்ச்சி கல்யாணத்துக்குப் பிறகு கிடைக்காதுனு நினைக்கிறேன். கல்யாணம் செய்துக்கிறதுல எனக்கு ஆர்வம் உண்டு. ஆனா, அதுக்கு இன்னும் உரியக் காலம் வரலைனு தோணுது. இன்னும் கொஞ்ச காலம் கழிச்சு நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன்.

-விளம்பரம்-
Advertisement