விடாது கருப்பு’ தொடரில் நடிச்சது நான்தான்னு பலருக்கும் தெரியாது – சீரியல் நடிகர் தடிங்குவின் மனைவி கொடுத்த பேட்டி.

0
654
- Advertisement -

பொதுவாகவே சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள்.
வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை வெள்ளித்திரையில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர் கவி. விடாது கருப்பு என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவி. இதனைத் தொடர்ந்து இவர் பல சீரியல்கள், படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் டிங்குவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து பிரேக் எடுத்து விட்டு அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் பிரபல சேனல் கவியிடம் பேட்டி எடுத்து இருந்தது. இதில் அவர் சீரியல் முதல் குடும்ப வாழ்க்கை வரை என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, எனக்கு சின்ன வயதிலிருந்தே டான்ஸ் மீது அதிக ஆர்வம். என் அப்பா தான் ஒய் ஜி மகேந்திரன் சார் இன்ஸ்டியூட்டில் என்னை சேர்த்து விட்டார். என் ஃபேமிலி எனக்கு நிறைய சப்போர்ட் செய்தார்கள். அப்படியே தொடர்ந்து நான் சீரியல், படங்கள் என்று பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன்.

- Advertisement -

கவி டிங்கு அளித்த பேட்டி:

இப்போது திருமதி செல்வம் சீரியல் ரீ டெலிகாஸ்ட் பண்ணுவதை பார்த்து பலரும் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணி உங்களை மிஸ் பண்ணுகிறோம் என்று கூறி இருந்தார்கள். அந்த சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் செம ஜாலியாக இருக்கும். என் கணவரும் அந்த சீரியலில் நடித்து இருந்தார். நாங்க ரெண்டு பேரும் திருமணம் பண்ணிக்கப் போறோம் என்று சொன்னதும் செட்டில் எல்லோருக்குமே பயங்கர ஷாக். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து அந்த சீரியலில் என்னால் நடிக்க முடியவில்லை. ஏனென்றால், ரெண்டு பெரும் ஒரே சீரியலில் நடித்தால் நேரம் உட்பட சில பிரச்சனைகள் வரும்.

சீரியலில் இருந்து விலக காரணம்:

அதனால் சரி யாராவது ஒருத்தர் விலகிவிடலாம் என்று முடிவெடுத்து நான் சீரியல் இருந்து விலகிவிட்டேன். நான் ஒர்க் பண்ணின இயக்குனர்கள் எல்லாருமே நல்ல டைப் தான். விடாது கருப்பு சீரியல் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. நாகா சார் எனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுத்தார். ஒன்னு தேவதர்ஷினி பண்ணின கதாபாத்திரம். இன்னொன்னு நான் பண்ணின கதாபாத்திரம். பின் நான் நடித்த கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்குது என்று ஓகே சொல்லிவிட்டேன். அந்த சீரியலில் நான் பல்செட் வைத்துக்கொண்டு, மேக்கப் போட்டுக் கொண்டு நடித்தேன்.

-விளம்பரம்-

விடாது கருப்பு சீரியல் அனுபவம்:

அந்த சீரியலுக்காக நெயில் பாலிஸ் கூட போடாமல் இருந்தேன். பலருக்கும் அந்த சீரியலில் நடித்தது நான் தான் என்று தெரியாது. பாலா சார்கிட்ட அது நான்தான் சொன்னதும் அவர் ஆச்சரியப்பட்டார். இப்போ நானும் என் கணவரும் சேர்ந்து ஒரு பிசினஸ் ஆரம்பித்து இருக்கிறோம். எங்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். லைபில் மட்டும் இல்லை வேலையிலும் அவர் என்னுடைய பார்ட்னர். நாங்கள் மார்பில் சம்பந்தமான பிசினஸ் செய்து கொண்டிருக்கிறோம். அவர் வெளி வேலைகள் எல்லாம் பார்த்துக் கொள்வார். நான் அட்மின் வேலையை கவனித்துக் கொள்வேன். எங்களுக்கு ரெண்டும் சின்ன பசங்க என்பதால் அவர்களை கவனித்துக் கொள்வதில் எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.

கவி-டிங்கு செய்யும் பிசினஸ்:

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஆபீஸ்ல வேலை பார்க்கணும். உடலளவிலும் மனதளவிலும் எனக்கு பயங்கர சப்போர்ட்டாக என்னுடைய கணவர் இருக்கிறார். மறுபடி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பது குறித்து கேட்டு இருந்தார்கள். நான் அமெரிக்காவில் பிசினஸில் பிஸியாக இருக்கிறேன். நாங்கள் சென்னையை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம். ஊருக்கு வந்து பல வருடம் ஆகிவிட்டது. அதனால் நடிக்கிறது எல்லாம் இப்போதைக்கு இல்லை. ஆனால், என் கணவருக்கு கதை இயக்கனும் என்ற ஆசை இருக்கு. அதனால் சீக்கிரமாகவே தயாரிப்பாளராக எங்களை பார்க்கலாம் என்று புன்னகையுடன் கூறியிருந்தார்.

Advertisement