தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்துள்ளது. மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது பல படங்களில் கீர்த்தி சுரேஷ் பிசியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் அவர்கள் சமீபத்தில் சொந்தமாக ஸ்கின் கேர் ப்ராடக்ட்களையும் தயாரிக்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்கு சமூக இடைவெளியும் இல்லாமல் மாஸ்க் இல்லாமலும் சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தெலுங்கானாவில் இருக்கும் ஷாப்பிங் மால் ஒன்றை திறந்து வைக்க சென்றுள்ளார். அப்போது பட்டுப்புடவையில் மிக அழகாக பொம்மை போல் காட்சி அளிக்கும் கீர்த்தி சுரேசை பார்க்க ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. இவ்வளவு கூட்டத்திலும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் மாஸ்க் இல்லாமல் சமூக இடைவெளி இல்லாமல் ரசிகர்கள் உடன் நின்று போட்டோ எடுத்து உள்ளார். மேலும், ஷாப்பிங் மால் திறக்க வந்த கீர்த்தி சுரேஷ் அவர்கள் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி, சமூக இடைவெளி இன்றி, மாஸ்க் இல்லாமல் வந்துள்ளதால் சோசியல் மீடியாவில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.