இதுவரை பலரும் அறிந்திராத குஷ்புவின் தம்பி குறித்த தகவல் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. நடிகை குஷ்பூ குஷ்பூ அவர்கள் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின் 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம்,தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் குஷ்பூ அவர்கள் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது குஷ்பூ அவர்கள் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் படங்களில் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும், நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.
இதையும் பாருங்க : பிளாட்டாக மாறிய தரிசு நிலத்தை வாங்கி தேவயானி எப்படி மாற்றியுள்ளார் பாருங்க – பாத்தா நீங்களே பாராட்டுவீங்க.
அண்ணாத்த படத்தில் குஷ்பூ:
அதுமட்டும் இல்லாமல் இவர் “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் குஷ்பூ நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா,சூரி என்று பலர் நடித்திருக்கிறார்கள். இதில் ரஜினியின் முறைப்பெண்ணாக குஷ்பூ நடித்து உள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலும் வாரி குவித்து இருக்கிறது.
குஷ்பூ நடிக்கும் சீரியல்:
இதனை தொடர்ந்து குஷ்பூ பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அதிலும் சமீப காலமாகவே குஷ்பு அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு குஷ்பு எப்போதும் சமூகம் சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது குஷ்பு மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க இருக்கிறார். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் மீரா என்ற சீரியலை இவரே இயக்கி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குஷ்பூ தம்பி நடித்த படம்:
இந்த தொடர் பெண்கள் சுதந்திரம், பெண்கள் உரிமை ஆகியவை மையமாகக் கொண்டதாக இருக்கிறது.
இந்த நிலையில் குஷ்பு குறித்து ஒரு ஸ்பெஷலான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், குஷ்பூ உடைய தம்பி பற்றிய தகவல் தான். குஷ்புவின் தம்பி பெயர் அப்துல்லா. இவரும் நடிகர் ஆவார். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மாயா மோஹினி என்ற படத்தில் அப்துல்லா ஹீரோவாக நடித்திருந்தார்.
குஷ்பூ தம்பி பற்றிய தகவல்:
இந்த படத்தை ராசா விக்ரம் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படம் பேய் கதையை மைமயமாக கொண்ட படம். அதற்கு இவர் நடித்த படம் குறித்த விவரம் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது குஷ்பு தன் தம்பியுடன் இருக்கும் சிறுவயது, தற்போது இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் குஷ்புவிற்கு இவ்வளவு அழகான தம்பியா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! என்று வியந்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.