துள்ளாத மனமும் துள்ளும் 22 ஆண்டுகள் நிறைவு – சிம்ரன் பதிவிட்ட Throwback புகைப்படங்களுக்கு போட்டியாக சந்திரலேகா புகைப்படங்களை பகிர்ந்த வனிதா.

0
18373
Vijay
- Advertisement -

இயக்குனர் எழில் இயக்கத்தில் விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படம் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்து இருந்தது. விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, டவுசர் பாண்டி,தாடி பாலாஜி என்று பலர் நடித்த இந்த படம் வெளியாகி நேற்றோடு 22 ஆண்டுகள் ஆகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் சிம்ரன் அந்த படத்தின் ThrowBack புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு போட்டியாக வனிதாவும் விஜய்யுடன் நடித்த படத்தின் Throwback புகைப்படங்களை பதிவிடுள்ளார்.

-விளம்பரம்-

நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதாதான் அவ்வப்போது சமூக வளைதளத்தில் விவாதப் பொருளாக மாறி விடுகிறார். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : இந்த வாரமும் குக்கு வித் கோமாளி இல்லையா ? இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ் டேக். மன்னிப்பு கேட்ட ஹாட் ஸ்டார் நிறுவனம்.

- Advertisement -

சமீபத்தில் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா கூறி இருந்தார். சமீபத்தில் கூட தனது கையில் இருந்த பீட்டர் பவுலின் டாட்டூவை கூட அழித்தார் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ராஜ்கிரானுடன் ‘மாணிக்கம்’ படத்தில் நடித்திருந்தார். இந்த ரெண்டு படத்திற்கு பின்னர் திருமணம் ஆன வரை எந்த படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் மீண்டும் ராபர்ட் மாஸ்டருடன் ‘எம் ஜி ஆர், சிவாஜி ரஜினி கமல்’ படத்தில் நடித்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா, விஜய்யுடன் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் சில throw back புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் வனிதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியாகி 22 ஆண்டுகள் சிம்ரன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அந்த படத்தின் throw back புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு போட்டியாக தான் வனிதா இப்படி சந்திரலேகா படத்தின் throw back புகைப்படத்தை பகிர்ந்தள்ளார்ு என்று பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்துவிட்டு வனிதா அட்ராசிட்டி செய்து வருவதாகவும் கமன்ட் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நடிகை வனிதா, மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆடம் தாசன் இந்த படத்தை இயக்க உள்ளாராம். இவர் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாம். படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement