5 வருட காதல், 2000 தில் திருமணம் – தனது முதல் குழந்தை பிறந்த போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட குஷ்பூ

0
8420
kushboo
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ படம் துவங்கி பல படங்களில் நாயகியாக நடித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் முதல் விஜயகாந்த், சரத்குமார் என்று பல நடிகர்களுடன் நடித்துவிட்டார் நடிகை குஷ்பூ.

-விளம்பரம்-

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள் குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிளும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியும், குஷ்பூவும் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : கோடியில் சம்பளம், நிர்வாண காட்சியில் ஒப்புக்கொண்ட ஆண்ட்ரியா ? இந்த இயக்குனர்க்கு இதே வேலையா போச்சே.

- Advertisement -

மேலும், இவர்கள் திருமணம் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி நடந்தது. திருமணத்திற்கு முன்னரே 5 வருடங்கள் குஷ்பூ மற்றும் சுந்தர் சி காதலித்து இருந்துள்ளனர். குஷ்பூவிடம் முதலில் காதலை சொன்னது சுந்தர் சி தான். கடந்த பிப்ரவரி மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு குஷ்பூ, என்னிடம் காதலை சொல்லி 26 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போது எது உங்கள் காதலை உடனே ஏற்க வைத்தது என்று தெரியவில்லை.

அந்த நேரத்தில் உங்களின் உள்ளுணர்வை நம்பி எடுத்த முடிவு சிறப்பானது. அதை நான் செய்தேன் என்பதில் பெருமைகொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை குஷ்பூ, தனது முதல் குழந்தை பிறந்த போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு 1995ல் நாம் காதலில் விழுந்தோம். 2000தில் திருமணம் செய்தோம். தற்போது வரை நாம் ஒன்றாக வளர்ந்து இருக்கிறோம். காலங்கள் மாறிவிட்டது நாம் அப்படியே தான் இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement