கணவர் பெயர் கூட இல்லை, தன் நெருங்கிய 5 நண்பர்களின் பெயர்களின் முதல் எழுத்தை பச்சையாக குத்தியுள்ள குஷ்பூ.

0
3960
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்பு 1989ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். பிறகு இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

பின்னர் குஷ்பூ அவர்கள் திரைப்பட இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குஷ்பு அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன் கையில் பச்சை குத்தி இருக்கும் நண்பர்களின் பெயர்களை சொல்லியிருக்கிறார்.

இதையும் பாருங்க : 4 பக்க கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய இளம் சீரியல் நடிகை – பாவம், இப்படி ஒரு பிரச்சனையா ?

- Advertisement -

தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிறது. அதில் அவர் கூறியது, நான் என்னுடைய பெஸ்ட் பிரண்ட்ஸோட இனிசியலை தான் கையில் பச்சை குத்தி இருக்கிறேன். அதில் எம் என்றால் மோலி (பிருந்தா மாஸ்டர்), அனு பார்த்தசாரதி, சுஜாதா விஜயகுமார், சுப்பு அருணாச்சலம், ஹாசினி. இவர்கள் எல்லோரும் தான் என்னுடைய பெஸ்ட் பிரெண்ட்ஸ். இவர்களுடைய இனிஷியலை தான் கையில் பச்சை குத்தி வைத்திருக்கிறேன்.

அனு பார்த்தசாரதி, பிருந்தா மாஸ்டர், சுப்பு அருணாச்சலம்

இவர்கள் எல்லாம் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்று கூறியிருந்தார். தற்போது குஷ்பு அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளிவரப்போகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்துடன் சேர்ந்து இந்த படத்தில் குஷ்பூ நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement