தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் ஆகும். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும்.
பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கி வந்தார். மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள் குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிளும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியும், குஷ்பூவும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இதையும் பாருங்க : அட, பிகில் பட வில்லன் நிஜத்தில் இப்படி ஒரு போலீஸ் அதிகாரியா மாறிட்டாரு – இவருக்கும் பின்னால் இப்படி ஒரு கதை.
மேலும், இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். மேலும், இவர்கள் திருமணம் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி நடந்தது. இப்படி ஒரு நிலையில் இன்று தனது கணவர் தன்னிடம் காதலை தெரிவித்து 26 ஆண்டுகள் ஆகிறது என்று குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதாவது திருமணத்திற்கு முன்னரே 5 வருடங்கள் குஷ்பூ மற்றும் சுந்தர் சி காதலித்து இருந்துள்ளனர். சுந்தர் சி காதலை சொல்லி இன்றோடு 26 ஆண்டுகள் ஆனதையொட்டி இதுகுறித்துஇன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பூ,
என்னிடம் காதலை சொல்லி 26 வருடங்கள் ஆகிவிட்டது. அப்போது எது உங்கள் காதலை உடனே ஏற்க வைத்தது என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் உங்களின் உள்ளுணர்வை நம்பி எடுத்த முடிவு சிறப்பானது. அதை நான் செய்தேன் என்பதில் பெருமைகொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.