சபரிமலை செல்லும் வழியில் சரங்குத்தி என்ற இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் விஜயனை அடையாளம் கண்டு கொள்ளும் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதெல்லாம் சரி யார் இந்த விஜயன், மக்களுக்கு எப்படி இவர் பரிட்சயம் என்று பார்ப்போம். அட்லீ இயக்கத்தில் இளைய விஜய் நடிப்பில்கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘பிகில்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷாராப், ஆனந்த் ராஜ், விவேக், யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி, இந்துஜா, ரேபா மோனிகா, ரோபோ சங்கர் மகள் என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அதிலும் இந்த படத்தில் கால்பந்து விளையாட்டு அணியில் இருந்த அனைத்து நடிகர்களுமே உண்மையான கால்பந்தாட்ட வீரர்களை போல நடித்திருந்தனர். அதிலும் பிகில் படத்தில் வில்லனாக நடித்த இவருக்கும் கால்பந்தாட்டத்திற்கும் நிறையவே சம்மந்தம் இருக்கிறது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இவர் தான் நிஜ வாழ்வில் ஒரு உண்மையான பிகில். இவர் வேறு யாரும் இல்லை, இவரும் ஒரு பிரபல கால்பந்தாட்ட வீரர் தான். இவருடைய பெயர் ஐ எம் விஜயன். கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட இவர் வறுமையின் காரணமாக ஆரம்பத்தில் திருச்சூர் முனிசிபாலிட்டி மைதானத்தில் சோடா விற்று வந்தார். சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த விஜயன், பின்னர் கேரள டிஜிபி மூலமாக கேரளா காவல்துறையில் கால்பந்தாட்ட கிளப்பில் தனது 17 வயதில் இணைந்தார். கேரள காவல்துறை கால்பந்தாட்ட அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த விஜயன் பல்வேறு போட்டிகளில் தனது அபார ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.
இதையும் பாருங்க : அடியே ரத்தி அக்கினி ஹோத்திரி – மான் கராத்தே பட நடிகையா இது – எஸ் கே சொன்னது போல நல்லா டின் பீர் மாதிரி தான் இருக்காங்க.
அதன்பின்னர் பல்வேறு போட்டிகளில் ஆடிய விஜயன் பல்வேறு கால்பந்தாட்ட கிளப்பில் ஆடி வந்தார். மேலும், 1999 ஆம் ஆண்டு சவுத் ஏசியன் பெடரேஷன் நடத்திய கால் பந்தாட்ட போட்டியில் 12 நொடிகளில் கோல் அடித்து சாதனை படைத்தார்.அந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு விஜயன் ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார். அதன்பின்னர் 2003ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து விலகினார். இதுவரை 40 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய விஜயன், 29 கோல்களை அடித்துள்ளார். கால்பந்தாட்ட விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
மலையாளத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஷாந்தம் என்ற படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கிய விஜய், விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் ஸ்ரியா ரெட்டியின் அண்ணனாக நடித்திருந்தார். மலையாளத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயன் தமிழில் திமிரு, கொம்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதுமட்டுமல்லாமல் கடந்த 2018ஆம் ஆண்டுபிக் டாடி என்டர்டெய்ன்மென்ட் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்தார் விஜயன்.
இதையும் பாருங்க : ஜகமே தந்திரம் படத்தின் டீஸர் வந்துறுச்சசேனு சந்தோசபடறதா, இல்ல OTT-ல ரிலீஸ்னு வருத்தப்படறதா – குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள்.
இந்தியாவுக்காகப் பல ஆண்டு காலம் கால்பந்து விளையாடி இருந்தாலும் விஜயனின் வங்கிக் கணக்கில் பெரிய அளவில் பணம் சேர்ந்து விடவில்லை. கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகையில் விஜயனுக்குக் கிடைத்தது சொற்பமே. ஓய்வுக்குப் பிறகு பல கால்பந்து அணிகளுக்குப் பயிற்சியாளராக பணியாற்றிய விஜயன், 2012- ம் ஆண்டு மீண்டும் கேரளா போலீஸில் பணிக்குச் சேர்ந்தார். இந்நிலையில் தற்போது கேரள காவல்துறையில் அசிஸ்டென்ட் காம்ண்டன்ட்டாக தான் பதவி உயர்வு பெற்றிருப்பதாக ஐ.எம்.விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.