தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் லைலா. இவர் 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே இவர் மலையாளம், தெலுங்கு, உருது, மலையாளம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா துறையில் முதன் முறையில் அறிமுகமானது இந்தியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான துஷ்மன் துனியா கா என்ற படத்தின் மூலம் தான்.

அதன் பின் இவர் தமிழில் நிறைய ஹிட் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு நல்ல பெயரும் கிடைத்து இருக்கிறது. இடையில் இவர் தொழிலதிபதிரை 2006 அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் 8 ஆண்டுகளாக தான் காதலித்து வந்த இரானை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை லைலா நிறுத்திவிட்டார்.
லைலா குறித்த தகவல்:
நீண்ட இடைவேளைக்கு பிறகு லைலா அவர்கள் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள லைலா தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தான் இவர் சூர்யாவுடன் நடித்திருந்த மௌனம் பேசியதே படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

லைலா பேட்டி:
இந்நிலையில் தன்னுடைய சினிமா கேரியர் பற்றி அளித்த பேட்டியில் லைலா, நான் சாதனைகளை கணக்கில் வைத்துக் கொள்வதே கிடையாது. நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதே என்னுடைய ஒரே லட்சியம். இதுவரை என்னுடைய பயணம் ரொம்பவே அருமையாக இருந்தது. ஒவ்வொரு படமும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பெண் நடிகைகளுக்கு ஆண் நடிகர்களை போல நல்ல வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது. ஆனால், இப்போது நிலைமை கொஞ்சம் மாறி இருக்கிறது.

கேரியர் பற்றி சொன்னது:
தற்போது பெண்களையும் மையமாகக் கொண்ட படங்கள் வருகிறது. நானும் அந்த மாதிரி ஒரு வெப் சீரிஸில் நடிக்க விரும்புகிறேன். நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். மௌனம் பேசிய படம் புதிதாக ரிலீஸ் செய்யப்பட்டது போலவே இருந்தது. இப்போது இருக்கும் ஜெனரேஷன் அந்த படத்தை கண்டு ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். அந்த படத்தை பார்க்கும் போது பழைய படம் போலவே எனக்கு தெரியவில்லை. படத்தின் பின்னணி இன்றைய காலத்திற்கு ஏற்ப இருக்கிறது. இயக்குனர் அமீர் ரொம்பவே எதிர்கால சிந்தனை உடன் அந்த படத்தை உருவாக்கி இருந்தார் என்று நினைக்கிறேன்.






