20 வயசு பொண்ணு மாதிரி இருக்கீங்க – 90ஸ் கிட்ஸ்களை ஈர்த்த லைலாவின் லேட்டஸ்ட் போஸ்ட்.

0
1001
laila
- Advertisement -

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான லைலா 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே என்று இந்தி, தெலுங்கு, உருது, மலையாளம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார் லைலா. இவர் சினிமா துறையில் முதன் முறையில் அறிமுகமானது இந்தியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான துஷ்மன் துனியா கா என்ற படத்தின் மூலம் தான். தமிழில் வெளியான கள்ளழகர் திரைப்படத்திற்கு பின்னர் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த்,அஜித்,சூர்யா,விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார் நடிகை லைலா.

-விளம்பரம்-

“தில், தீனா, மௌனம் பேசியதே “போன்ற ஹிட் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. தமிழ் திரையுலகில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நிலைத்து நின்ற லைலா, கன்னடம்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும், இவர் விஜய்யுடன் உன்னை நினைத்து படத்திலும் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்தில் இருந்து விஜய் விலகி விட பின்னர் சூர்யா தான் கதாநாயகனாக நடித்தார். மேலும், விஜய் தான் என்னிடம் இருந்து தப்பிய ஒரே என்று சமீபத்தில் பேட்டியில் நடிகை லைலா கிண்டலாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

லலைலாவிற்கு எந்த திரையுலகிலும் நிலையான அடையாளம் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 2006 அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை லைலா, தான் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இரானை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். அதில் மூத்த மகனுக்கு 10 வயதும் இளைய மகனுக்கு 8 வயதும் ஆகிறது. திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட பின் லலைலா என்னவானார் என்று தெரியவில்லை.

இறுதியாக நடிகை லைலாவை அஜித்துடன் திருப்பதி படத்தில் பார்த்தது தான் அதன் பின்னர் நடிகை லைலா எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை, இறுதியாக ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றார் நடிகை லைலா. இப்படி ஒரு நிலையில் நடிகை லைலா சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலர், உங்களுக்கு வயசு பின்னால் நோக்கி போகுது என்று லைலாவின் இளமையை கண்டு வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement