மார்புக்கு மேல் இருக்கும் டாட்டூவை நீக்கிப்போகிறேன் – லட்சுமி மேனன் சொன்ன அந்த டாட்டூ இது தான்.

0
7787
lakshmi

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மேனன் தனது டாட்டூ குறித்து பேசியுள்ளார். அதில், “ஒரு முறை டாட்டூஸ் போட்டுட்டாலே addiciton ஆகிருவோம். இதனாலேயே கை, கழுத்துக்குப் பின்னாடி, மார்புக்கு மேலன்னு மொத்த மூணு டாட்டூஸ் வரை போட்டுட்டேன். கழுத்துக்குப் பின்னாடி வித்தியாசமா இருக்கணும்னு mandala டாட்டூஸ் போட்டேன். கையிலே angel wings போட்டிருக்கேன். மார்புக்கு மேல இருக்குற டாட்டூவை நீக்க வேண்டும்னு நினைச்சிட்டிருக்கேன் என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன்.

மேலும், உடல் எடை குறித்து பேசிய லட்சுமி மேனன், ‘எப்படி ஸ்லிம் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை. நிறைய டான்ஸ் பண்ணினேன். ஆனா, எடை குறைக்கணும்கிறதுக்காக டான்ஸ் பண்ணல. அதுவா குறைஞ்சுடுச்சு. எப்போவுமே நல்லா சாப்பிடுவேன். அதுல எந்தக் குறையும் வச்சது இல்லை என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன். விரைவில் லட்சுமி மேனன் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement