யாரு குண்டுனு சொன்னீங்க ? உடல் எடை குறைத்து வேற லெவலில் ரீ-என்ட்ரி கொடுத்த லட்சுமி மேனன்.

0
8981
lakshmi-menon-actress
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2016ம் ஆண்டு வெளி வந்தது. அதற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் நடிகை லட்சுமி மேனன் அவர்கள் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்தார்.

- Advertisement -

நடிகை லட்சுமி மேனன் சினிமாவை விட்டு விலகியது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.தற்போது இவர் சோஷியாலஜி பட்டப் படிப்பை படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். படிப்பை முடித்து விட்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

View this post on Instagram

Recent Clicks Of Actress #LakshmiMenon

A post shared by Behind Talkies (@behindtalkies) on

தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் இதனை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.தற்போது லட்சுமி மேனன் இயக்குனர் முத்தையா இயக்கும் புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்திற்கு சிப்பாய் என்று பெயர் வைத்து உள்ளார்கள்

-விளம்பரம்-
Advertisement