இத்தனை வருஷம் காதலித்தேன், ஆனா இப்போ நான் சிங்கிள் இல்ல – லட்சுமி மேனன்

0
5540
lakshmi
- Advertisement -

தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்ட ரசிகருக்கு நடிகை லட்சுமி மேனன் கேலியாக பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவரும் விஷாலும் காதலித்ததாக தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இருவருமே தங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என்று தான் சாதித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறிய கேம் ஒன்றை ஆடிய லட்சுமி மேனன், இதுவரை 3 ஆண்டுகும் மேல் காதலில் இருந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ஆம், என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : ஹீரோயின் ஆன பின்னர் ரஜினியின் தங்கையாக நடிக்க மறுத்துள்ள ஷாலினி ? காரணம் இதான். (என்ன மாதிரி படம் இது)

- Advertisement -

இதனை பலரும் விஷால் என்று தான் கூறி வருகின்றனர். அதே போல ஏற்கனவே நடிகை லட்சுமி மேனன் தான் சிங்கிள் இல்லை என்றும் ஆனால், தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை கிடையாது என்றும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷாலுக்கு தெலுங்கு நடிகை அனிஷா என்பவருடன் கடந்த 2019 ஆம் ஆண்டு கடந்த மே மாதம் 16-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

This image has an empty alt attribute; its file name is 1-85-1024x906.jpg

கடந்த ஆண்டு விஷாலின் நிட்சதர்த்தத்திற்கு பின்னர் பேட்டி ஒன்றில் பேசிய லட்சுமி மேனன், எப்போதாவது விஷால்கிட்ட மெசேஜ்ல பேசுவேன். வேற யார்கூடவும் பெருசா பேசல. விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சிருக்கு. கல்யாணத்துக்குச் சொன்னார்னா போவேன். அப்போ இருக்குற சூழலைப் பொறுத்து என்று கூறி இருந்தார். ஆனால், விஷாலின் திருமணம் நின்றுவிட்டதாக தான் கோலிவுட் வட்டாரத்தில் உறுதியாக சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement