தில்லு முல்லு பட நடிகையின் மகளுக்கு உலகின் மிகப்பெரிய இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்து படிக்க அழைப்பு வந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இருந்த 80ஸ் காலகட்ட நடிகைகளை தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் 80ஸ் கால கட்டத்தில் இளசுகளின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை மாதவி. இவர் 1962ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தவர்.
இவருடைய உண்மையான பெயர் அல்லதுர்கம் மாதவி. இவர் சிறு வயதில் நாட்டிய கலையில் கைதேர்ந்தவர். கிட்டத்தட்ட 1000 மேடையில் தனது நாட்டிய திறமையை மாதவி காட்டி இருக்கிறார். பின் 1981ல் ரஜினிகாந்தின் தில்லு முள்ளு படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் இவர் ரஜினியுடன் கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வழிந்தால் ஆகிய பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
மாதவி திரைப்பயணம்:
அதோடு இவர் ஹிந்தியில் அமிதாப் பச்சனுடனும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் 80 மற்றும் 90களில் வெளிவந்த தமிழ் படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ,கன்னடம் ,ஒரியா என அனைத்து மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார் மாதவி. அந்த காலகட்டத்திலேயே பிகினி காட்சிகளில் தயங்காமல் நடித்த முன்னணி நடிகைகளில் மாதவியும் ஒருவர். தமிழ் சினிமாவில் கொடி கட்டி பரந்த நடிகை மாதவி பின்னர் பாலிவுட் சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்கினார்.
மாதவி திருமணம்:
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் உச்சத்தில் இருந்த மாதவிக்கு வயதும் ஏறியது, பின் படங்களும் தொடர்ந்து பிளாப் ஆனது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்த மாதவி, தனது தோழரான ரஜினியிடம் ஆலோசனை கேட்க ரஜினியோ இமய மலையில் இருக்கும் தன் குரு ஒருவரை சென்று பார்க்க சொல்லி இருக்கிறார். அதன் பின் இமயமலை சாமியார் சொல்லிய அறிவுரைப்படி மாதாவி அங்கு வந்த வெளிநாட்டு பக்தரை திருமணம் திருமணம் செய்து கொண்டார்.
மாதவி குடும்பம்:
அவரின் பெயர் ரால்ப் சர்மா. இவரை திருமணம் செய்யும் போது அவரை தொழில் ரீதியாக நஷ்டம் அடைந்து இருந்தார். திருமணத்திற்கு பின்னர் ரால்ப் சர்மா தொழில் நல்ல வளர்ச்சி பெற்றது. தற்போது மாதவிக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள். அதே போல திருமணத்திற்கு பின்னர் சினிமாவிற்கு திரும்பாத மாதவி அமெரிக்காவிலேயே தொழிலையும் குடும்பத்தையும் கவனித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது 27வது திருமண நாளை கொண்டாடி இருந்தார். இந்த நிலையில் நடிகை மாதவியின் மகள் பிரிசில்லா என்பவர் இளங்கலையில் அதிக மதிப்பெண்கள் பெற்று தன்னுடைய படிப்பை முடித்திருக்கிறார்.
மாதவி மகள் செய்த சாதனை:
அது மட்டும் இல்லாமல் இவருடைய மதிப்பெண்களை பார்த்து உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களான ஹார்ட்வேர் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகிவற்றிலிருந்து மேல்படிப்பு படிப்பதற்காக இவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து நடிகை மாதவி, என்னுடைய மகளின் படிப்பு குறித்தும், மதிப்பெண்கள் குறித்தும் ஒரு அம்மாவாக எனக்கு பெருமையாக இருக்கிறது என்று சந்தோஷத்தில் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே நடிகை மாதவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.