தன்னுடைய விவாகரத்து குறித்து சோசியல் மீடியாவில் எழுந்த சர்ச்சைக்கு கோபமாக பிரியாமணி கொடுத்திருக்கும் விளக்கம் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரியாமணி. இவர் தெலுங்கு திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த ‘எவரே அதகாடு ’ படத்தில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ப்ரித்விராஜின் ‘சத்யம்’ என்ற மலையாள படத்தில் நடித்தார்.
பின் இவர் தமிழில் வெளி வந்த ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு இவர் அது ஒரு கனாக்காலம், மது, பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார். இருந்தாலும், இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்திற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.
மேலும் பிரியாமணி அவர்கள் மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் பிரியாமணி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்திருந்தார். சில காலம் திரையில் இவர் காணாமல் போனார். அதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை ப்ரியாமணி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் ப்ரியாமணி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
தற்போது இவர் வெப்சீரிஸ், சினிமாக்களில் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஃபேமிலி மேன் என்ற திரைப்படத்தில் பிரியாமணி நடித்திருந்தார். தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் பாலிவுட் படத்திலும் பிரியாமணி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு நிலையில் பேமிலி மேன் தொடரில் நடித்த நிலையில் பிரியாமணியும் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் பரவி வந்தது. பிரியாமணி கணவரான முஸ்தபா ராஜ் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.
தன் கணவரின் முதல் மனைவியால் தான் முஸ்தபா, ப்ரியாமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் பிரியா மணி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், சோசியல் மீடியாவில் வரும் விமர்சனங்கள் குறித்து நான் பெரிதாக கண்டு கொள்வதில்லை. அதில் நான் கவனம் செலுத்தி பதில் கொடுத்து வந்தால் அது அதிகரித்துக் கொண்டே செல்லும். என்னுடைய திருமணத்திற்கு பிறகு நிறைய விமர்சனங்கள் வந்தது. நீங்கள் ஏன் உங்கள் மதத்தை விட்டு வெளியேறினீர்கள்? நீங்கள் வேறு மத நபரை திருமணம் செய்கிறீர்களா? உங்கள் குழந்தையின்ஜிகாதிகளாக பிறப்பார்கள்.
இது லவ் ஜிகாத் என்றெல்லாம் விமர்சித்து இருந்தார்கள். எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை என்றெல்லாம் பேசினார்கள். என்னுடைய கணவரை விவாகரத்து செய்ய சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்கள். என்னுடைய திருமண வாழ்க்கை நன்றாக சந்தோஷமாக, மகிழ்ச்சியாக செல்கிறது. என்னுடைய திருமண வாழ்க்கை குறித்து இணையத்தில் வெளியாகும் தகவல்கள் எல்லாமே பொய். காதலித்தவரை திருமணம் செய்து கொள்வது தவறா? முஸ்தபா ராஜா வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதில் என்ன தவறு? எல்லா முஸ்லிம்களும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இல்லை. எல்லோரும் லவ் ஜிகாத் இல்லை. கொஞ்சம் புத்திசாலியாக சிந்தித்துப் பேசியுங்கள் என்று கூறியிருக்கிறார்.