பழைய கதைகளை திரையில் பேசினால் முற்போக்கு, புரட்சி – மகளிர் ஆணைய தலைவர் கூறிய அறிவுரையை பகிர்ந்து விளாசிய மோகன்

0
1566
MohanG
- Advertisement -

பெண்களின் பாதுகாப்பு குறித்து மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி கூறிய அறிவுரையை பகிர்ந்து தனது படங்களை கேலி செய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும், இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

- Advertisement -

இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்து இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சமீபத்தில் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பகாசூரன். இந்த படத்தில் நட்டி நடராஜன், ராதாரவி, vj லயா என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருந்தார்.

சமூகத்தில் பெண்கள் பாலியில் தொழிலில் எப்படி சிக்குகிறார்கள், செல் போன்கள் மற்றும் சமுக வலைத்தளத்தினால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது போன்றவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார்.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பிற்போக்குத்தனமான கருத்துக்களை குறித்தும் இந்த படம் பேசி இருந்ததாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து மோகன் ஜி அடிக்கடி சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் தவறான விஷயங்களை பகிர்ந்து தனது படங்களுடன் ஒப்பிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேசிய கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த பதிவில் ‘கல்லூரி மாணவிகள் DPயில் புகைப்படங்களை வைக்க வேண்டாம் புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்கிறார்கள். டெக்னாலஜியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதை அளவில் தீமைகளும் இருக்கிறது அதனை எப்படி ஆள வேண்டும் என்பது முக்கியம் என்று அறிவுரை கூறியிருந்தார்.

இந்த பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இயக்குனர் மோகன் ‘இந்த அறிவுரை சாதி வெறியாகவும், பிற்போக்குதனமாகவும் பார்க்கப்படும்..இன்றைய சமுதாயத்தில் நடக்கும் எந்த தவறையும் திரைப்படத்தில் காட்ட கூடாது.. மீறினால் சாதி வெறியன், பிற்போக்குவாதி பட்டம் தரப்படும்.. பழைய கதைகளை திரையில் பேசினால் முற்போக்கு, புரட்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement