பாக்ஸ் ஆபீசில் செம அடி வாங்கிய சாகுந்தலம் – மன வருத்தத்தில் மதுபாலா அளித்த பேட்டி

0
665
- Advertisement -

சமந்தாவின் சாகுந்தலம் படம் தோல்வி அடைந்தது என்று நடிகை மதுபாலா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சம்ந்தா நடித்திருந்தாலும் தமிழ், தெலுங்கில் தான் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பின் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் யசோதா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சாகுந்தலம். இந்த படத்தை குணசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு மணிசர்மா இசையமைத்து இருக்கிறார். சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் நித்திய காதல் கதை தான் சாகுந்தலம். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழிகளில் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சாகுந்தலம் படம்:

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தது. அது மட்டும் மேலும் இந்த படம் வெளியான முதல் நாளில் 5 கோடிக்கு மட்டும் வசூல் செய்து இருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் 65 லிருந்து 70 கோடி இருக்கும். இந்த நிலையில் எதிர்பார்த்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை. இந்த படம் குறித்து ரசிகர்கள் பலரும் எதிர்மறையாக கூறி வருகின்றனர். மேலும், இந்த படத்தில் மேனகாவாக நடிகை மதுபாலா நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் மதுபாலா பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

மதுபாலா அளித்த பேட்டி:

அதில் அவர், சாகுந்தலம் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இது மனதளவில் ரொம்ப வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அதிக உழைப்பு கொடுத்திருந்தார்கள். படம் உருவானதிலிருந்து திரைக்கு வரும் வரை அவர்கள் அதிக உழைப்பை போட்டார்கள். படப்பிடிப்பு, டப்பிங் பணிகள் முடிந்து கூட ஒரு ஆண்டு முழுவதும் சிஜிஐ எனப்படும் கணினி சார்ந்த பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

சாகுந்தலம் குறித்த தகவல்:

ரசிகர்களுக்கு திரையில் படத்தை நன்றாக காட்ட வேண்டும் என்று பல வேலைகளை செய்து இருந்தார்கள். மேலும், படப்பிடிப்பின் போது கலைஞர்களுக்கோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களுக்கோ எந்த ஒரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. எங்களுக்கு எந்த வசதியும் குறையாமல் நன்றாக தான் கவனித்துக் கொண்டனர். ஒரு படம் ஏன் வெற்றி அடைகிறது? ஏன் தோல்வி அடைகிறது? என்று யாராலை யுமே புரிந்து கொள்ள முடியாது.

படம் குறித்து சொன்னது:

சாகுந்தலம் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு வலுவான தென்னிந்திய அம்சங்களை கொண்ட கற்பையான விஷயங்கள் நிறைந்த கதை. பாகுபலி படம் இவ்வளவு பெரிய ஹிட் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சாகுந்தலம் நல்ல படம் என்ற போதிலும் தோல்வியடையும் என்றும் நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் இந்த படத்திற்காக உண்மையாக கடுமையாக உழைத்திருக்கிறோம். ஆனால், படத்தின் தோல்விதான் எங்கள் எல்லோருக்கும் வேதனையை அளிக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement