அஜித் பட நடிகை யார் ? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
2714
ullasam-Mageshwari

1997ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த படம் உல்லாசம். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தவர் மகேஸ்வரி. இந்த நடிகை மகேஸ்வரி யார் தெரியுமா? தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா?

maheshwari_and_sridevi

மகேஸ்வரி சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். நடிகை ஸ்ரீதேவியின் கஸின்’தான் இந்த நடிகை மகேஸ்வரி. 1994ஆம் ஆண்டு ‘க்ரண்ட்டிவீர்’ என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் அதேஆண்டு தமிழில் கருத்தம்மா என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் பிரபலம் ஆன மகேஸ்வரிக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் வந்தது.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பாஞ்சாலங்குறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், உல்லாசம், நேசம் ,ரத்னா , என்னுயிர் நீதானே, சுயம்வரம் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்தார்.

mageshwari

Actress mageshwari

காலம் செல்ல செல்ல இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதனால் சின்னத்திரைக்கு வந்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக ‘அதே கண்கள்’ என்ற சீரியல்களில் நடித்தார்.

அதனுடன் சேர்த்து தனக்கு சிறு வயதில் இருந்தே பேஷன் டிசைனிங்கில் ஆர்வம் இருந்தால், ஆடைகள் டிசைனிங் செய்யும் வேலையும் செய்தார். இதற்கு தன்னுடைய சித்தி ஸ்ரீதேவி மிகவும் உதவியாக இருந்தாத பலமுறை கூறியுள்ளார். மேலும் , நடிகை ஸ்ரீதேவிக்கு பலமுறை தன் கையால் டிசைன் செய்த உடைகளை கொடுத்துள்ளார். அதனை பல பார்ட்டிக்களுக்கும் அணிந்து வந்துள்ளார் ஸ்ரீதேவி. தற்போது சீரியல்களில் நடித்துக்கொண்டே பேஷன் டிசைனராகவும் இருந்து வருகிறார் மகேஸ்வரி.