90ஸில் கலக்கிய நடிகை மந்த்ராவா இது.! என்ன இப்படி ஆகிட்டாங்க.!

0
4408
Manthra-raasi
- Advertisement -

தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மந்த்ரா. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுகு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களிலும் பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் அஜீத், விஜய் போன்ற முன்னணி இளம் நடிகர்களுடன் ஒருகாலத்தில் ஜோடியாக நடித்த இவர் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
திருமணத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்குப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிற மந்தாராவுக்கு  கடந்த 2014 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

- Advertisement -

திருமணத்துக்குப் பிறகு தமிழில் ஒன்பதுல குரு படத்தில் நடித்தவர் சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு திரைப்படத்திலும் சின்ன வேடம் ஒன்றிலும் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை முழுக்கு போட்டார் மந்த்ரா.

இந்நிலையில் அவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ராசி மந்த்ரா-வா இது என்று ஷாக் ஆகிதான் கிடக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement