பிரபல இயக்குனரால் தன்னுடைய கேரியர் வீணாகிவிட்டது என்று நடிகை மந்த்ரா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மந்த்ரா. தமிழ் சினிமாவில் இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தனர். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் உள்ள முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார்.
குறிப்பாக, இவர் தமிழில் அஜீத் நடித்த ‘ரெட்டை ஜட வயசு’, விஜய்யின் ‘லவ் டுடே’ போன்ற நடிகர்களுடன் ஒருகாலத்தில் ஜோடியாக நடித்தவர். நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த மந்த்ரா, சிம்புவின் வாலு, ஜீவாவின் கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்து இருந்தார். பின் இவர் ஸ்ரீ முனி என்ற இயக்குனர் ஒருவரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் இவர் தமிழ், தெலுங்குப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து இருந்தார்.
நடிகை மந்த்ரா திரைப்பயணம்:
பின் மந்த்ராவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் படங்களில் நடிப்பதை முழுக்கு போட்டார். தற்போது மீண்டும் நடித்து வருகிறார். அதோடு இவர் ஜெமினி டிவி, ஸ்டார் மா போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் இடையில் இவர் உடல் எடை அதிகரித்து இருந்தார்.
நடிகை மந்த்ரா பேட்டி:
பின் உடற்பயிற்சி மேற்கொண்டு தற்போது உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக இருக்கிறார். அதோடு படங்களில் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை மந்த்ரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் தேஜா என்பவர் என்னிடம் கதை சொல்லி ஏமாற்றி இருந்தார். அதோடு அந்த நாட்களில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெறும்.
இயக்குனர் செய்த வேலை:
அந்த நிலையில் தான் இயக்குனர் தேஜா என்னை வந்து சந்தித்தார். அப்போது எனக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். மேலும், அவர் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி கூறி இருந்தார். அதில் நடிகர் கோபிசந்த் உடன் இணைந்து நடிப்பதாகவும், காதல் காட்சிகள் இருப்பதாகவும் கூறி இருந்தார். இதனை நம்பி நான் படத்தில் நடிக்க சம்மதித்தேன். இதனால் நான் அவரிடம் முன் பணமும் பெற்றுக் கொண்டேன். படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கிய போது என்னுடைய கதாபாத்திரம் அவர் கூறியது போல இல்லாமல் எதிர்மறையாக இருந்தது.
சினிமா வாய்ப்பு கிடைக்காத காரணம்:
இதைப் பற்றி தெரிந்தும் நான் திரைப் படத்தை விட்டு விலகாமல் நான் நடித்தேன். இதில் ரொம்ப கவர்ச்சியாக நடிக்க சொன்னார். அதுமட்டும் இல்லாமல் இத்தனை நாள் என் திரை உலகில் சம்பாதித்த பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்து தான் நான் நடித்தேன். இதனால் தான் என் கேரியர் வீணானது. எனக்கு இது மிக வருத்தமான செய்தியாக இருந்தது என்று கூறி இருந்தார்.