என் முதல் ஹீரோவுடன் 32 ஆண்டுகள் கழித்து நடிக்கின்றேன் – மீனா பதிவிட்ட புகைப்படம். (ரஜினினு நினைப்பீங்க அதான் இல்ல)

0
695
meena
- Advertisement -

32 ஆண்டுகள் கழித்து மீனா மீண்டும் முதல் வித உடன் நடித்திருக்கும் நடிக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் நடித்து வருகிறார். அதன் பின் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு,அஜித், உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பிசியாக நடித்து இருக்கிறார். மேலும், இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் மீனா நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீனா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அண்ணாத்த படம் :

அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மீனா பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

மீனா குடும்பம்:

இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். நைனிகா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் நடித்த முதல் ஹீரோ உடன் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக மீனா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

மீனா பதிவிட்ட பதிவு:

அதாவது, தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகர் ராஜேந்திர பிரசாத் உடன் தற்போது நடிகை மீனா இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தான் தற்போது நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, 32 ஆண்டுகள் கழித்து என்னுடைய முதல் ஹீரோவுடன் நான் மீண்டும் இணைந்து நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

மீனா நடித்த முதல் படம்:

தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 1990ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நவயுகம் என்ற திரைப்படத்தில் நடிகை மீனா நாயகியாக அறிமுகமாகி இருந்தார். அந்த படத்தில் ராஜேந்திர பிரசாத்துக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். தற்போது 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement