கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா. ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த போது அவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.நடிகை மேக்னாவும், சிரஞ்சீவி சார்ஜாவும் 10 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
சமீபத்தில் கூட நடிகர் சிரஞ்சீவியின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.அதில் அனைவரும் சிரித்து கொண்டு இருந்தனர். அதற்கு காரணத்தை சொன்ன மேக்னா, சிரஞ்சீவிக்கு நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசை. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் அனைவரும் அன்று முழுதும் சந்தோசமாக அவரது இரங்கலை அனுசரித்தோம் என்று கூறியிருந்தார்.சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் கற்பாக இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. சமீபத்தில் நடிகை மேக்னாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. , அதில் கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட்டுடன், தன்னுடைய வளைக்காப்பு நிகழ்வு படங்களை பகிர்ந்து இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் கடந்த அக்டொபர் மாதம் மேக்னா ராஜிற்கு ஆண் குழந்தை பிறந்து. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மேக்னா, சிரஞ்சீவி இறந்த தினத்தன்று என்ன நடந்தது என்பதை கூறியுள்ளார். அதில், வழக்கமான ஞாயிற்றுக்கிழமை போலத்தான் அந்த நாளும் சாதாரணமாக இருந்தது நான் சிருவின் சகோதரர் துருவா மற்றும் அவரது மனைவி அனைவரும் வீட்டின் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது சிரு மயங்கி விழுந்து விட்டதாக என் மாமனார் எங்களை அழைத்தார். என்ன ஏது என்று பதறிப்போய் நாங்கள் உள்ளே சென்று பார்த்த போது சிரு நினைவில் இல்லாமல் இருந்தார்.
அதன் பின்னர் நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் மருத்துவர்கள் சிருவை அவசர பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் பின்னர் சிருவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். எல்லாம் வேகமாக நடந்து முடிந்துவிட்டது. சிரு என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது. வீட்டில் அவருக்கு லேசாக நினைவு திரும்பியபோது என்னை பார்த்து நீ டென்ஷன் ஆகாதே, எனக்கு ஒன்றும் ஆகாது என்பதுதான் சிரு என்னிடம் கடைசியாக பேசிய வார்த்தை என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.