நவீன உலகில் தற்போது செல் போனில் பல்வேறு பொழுது போக்கு செயலிகள் வர துவங்கி விட்டன. அதிலும் கடந்த சில காலமாக டிக் டாக் எனப்படும் செயலி இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளது. தற்போது வேண்டுமானால் டிக் டாக் இளசுகள் மத்தியில் பிரபலமாக இருக்கலாம். ஆனால், அதற்கு விதை போட்டது என்னவோ டப் ஸ்மாஸ் என்ற செயலி தான் . இந்த டாப்ஸ்மாஷ் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமடைந்துள்ளனர்.
அந்த வகையில் பெங்களூரில் வசிக்கும் மிருணாளினி என்பவரின் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் இணையத்தில் செம்ம வைரல். இவர் செய்த டப் ஸ்மாஷ் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே போல மிருணாளினிக்கு டப்ஸ்மாஷ் மூலம் பல பட வாய்ப்புக்கள் கிடைத்தன. தற்போது இவர் ‘நகல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் அம்மணி. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் படு கிளாமராக நடித்து இருந்தார். தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு சாம்பியன் படத்தில் நடித்து இருந்தார். தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் இவர், தனது இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்து வந்த நபரின் சாட்டிங் ஸ்க்ரீன் சாட்டை பகிர்ந்துள்ளார். அதில், அந்த நபர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பியும் மிர்னாலினி பதில் அனுப்பாததால் ‘சீமான்’ பேசிய பேச்சை மிர்னாலினிக்கு அனுப்பி வைக்க அதை பார்த்து சிரித்த மிர்னாலினி அந்த ரசிகர்கற்கு, சாரிங்க பார்க்கல என்று சிரித்தபடி ரிப்லை செய்துள்ளார்.