கார் ஓட்டுநர் மீது போக்கிரி நடிகை முமைத் கான் பரபரப்பு புகார்.

0
1135
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா இடத்தை இன்னும் வரை யாராலும் பிடிக்க முடியவில்லை. சினிமா உலகில் பல கிளாமர் நடிகைகள் களத்தில் இறங்கினாலும் சில்க் ஸ்மிதா இடத்தை நிரப்ப முடியவில்லை. அந்த வகையில் ஓரளவு சில்க் ஸ்மிதா இடத்திற்கு வர முயற்சி செய்தவர் நடிகை முமைத் கான். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் முமைத் கான். இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் மூலமாக தான் சினிமா உலகிற்கு வந்தார்.

-விளம்பரம்-

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் துணை நடிகையாகவும், குத்து பாடல்களுக்கு நடனம் ஆடுபவராக தான் தோன்றி உள்ளார். இப்படி ஒரு நிலையில் முமைத்கான் தனக்குத் தர வேண்டிய ரூ.15000-த்தை தராமல் ஏமாற்றியதாக கார் ஓட்டுநர் ராஜு என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

- Advertisement -

நடிகை முமைத்கான் 3 நாள் பயணமாக கோவா செல்ல கார் புக் செய்ததாகவும், ஆனால் 8 நாட்கள் கோவாவில் தங்கி விட்டு பின்னர் தனக்குத் தரவேண்டிய ரூ.15000-பணத்தை தரவில்லை என்றும் கூறியுள்ள ராஜு, அதற்கு ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய கோவா முகவரி, சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தியதற்கான ரசீதுகளை ஊடகங்களிடம் ஒப்படைத்துள்ளார்.

Actor Mumaith Khan files complaint on cab driver- The New Indian Express

ஆனால், ஓட்டுனரின் புகாரை மறுத்துள்ள முமைத் கான், அவருக்கு கொடுக்க வேண்டிய தொகை முழுவதையும் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். தனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜூ கூறியுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் முமைத்கான் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுபற்றி இருவரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ள புஞ்சகட்டா போலீசார், தவறு யார் மீது இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

-விளம்பரம்-
Advertisement