ரம்பா அளித்த ஒற்றை பேட்டி – எக்ஸ்ஸில் ட்ரெண்டிங் ஆன #ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி ஹேஷ் டேக்.

0
462
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் விஜய்- ரஜினி தரப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் வாக்குவதம் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சையில் தான் இவர்கள் இருவருக்கும் மத்தியில் இந்த சண்டை பூதாகரமாக வெடித்தது. இனி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வாரிசு திரைப்படத்தின் விழாவில் சரத்குமார் கூறியிருந்தார். இதை அடுத்து விஜய் ரசிகர்கள், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் விஜய்யை விமர்சித்து பதிவுகளை போட ஆரம்பித்தார்கள். அதற்கேற்ப சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் பாடல்கள் எல்லாம் விஜயை விமர்சித்து இருப்பதாக கூறியிருந்தார்கள். பின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, காக்கா- கழுகு கதையை சொன்னார். இதில் பலரும் விஜய் தான் காக்கா என்று ரஜினி சொல்கிறார் என்றெல்லாம் ட்ரோல் செய்திருந்தார்கள்.

- Advertisement -

இதனால் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலுமே பனிப்போரே நடந்தது. இதற்கு பிரபலங்கள் பலருமே விளக்கம் கொடுத்தும் இருந்தார்கள். அதற்குப் பின் லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய், என்றென்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இருந்தாலும் இரு தரப்பு ரசிகர்கள் விடாது ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டுதான் வருகிறார்கள். அதோடு ஏதாவது ஒரு விஷயம் கிடைக்காதா என்றும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அருணாச்சலம் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு விஷயத்தை பேட்டியில் ரம்பா பேசியிருந்தது தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை விஜய் ரசிகர்கள் கட் செய்து இருக்கிறார்கள். அதில் ரம்பா, ரஜினி என்னை பின்பக்கம் அடித்தார். நான் அழுந்து விட்டேன் என்றெல்லாம் போட்டிருந்தார்கள். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள், தயவுசெய்து முழு வீடியோவையும் பாருங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதில் ரம்பா கூறி இருப்பது, அருணாச்சலம் படப்பிடிப்பின் போது வட இந்திய நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் வந்த போது நான் அவர்களை ஹக் செய்து வெல்கம் பண்ணி இருந்தேன். இதை பார்த்த ரஜினி சார் என்னை வரவழைத்து படக்குழுவினரை வரிசையாக நிக்க வைத்து என்னிடம், வட இந்தியாவில் இருந்து வந்தால் மட்டும் ஹக் செய்து மரியாதை நன்றாக பேசுகிறீர்கள்.

தென்னிந்தியர்களை பார்த்தால் என்ன கேவலமாக இருக்கா? குட்மார்னிங் சார், ஹாய் சார் என்று சொல்லிவிட்டு போய் ஓரமாக புத்தகம் எடுத்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கிண்டல் கேலியாக பேசி இருக்கிறார். ரஜினி சார் இப்படி எல்லாம் பேசுவார் என்று எனக்கு தெரியாது. அவர் ஜாலியாக பேசி இருந்தார் என்று ரொம்ப கூறியிருந்தார். இதை தான் விஜய் ரசிகர்கள் எடிட் செய்து இருந்தார்கள். தற்போது இந்த வீடியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இருப்பினும் விஜய் ரசிகர்கள் ரஜினியின் பழைய வீடியோக்களை எல்லாம் தோண்டி எடுத்து ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்று வருகின்றனர். அதிலும் ரஜினி, பெண்கள் விஷயத்தில் எப்படி என்பதை சுஹாசினி, சிவகுமார் போன்றவர்கள் கூறிய வீடியோக்களை பகிர்ந்து #ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி என்ற ஹேஷ் டேக்கை போட்டு கலாய்த்து வருகின்றனர். இதனால் #ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

Advertisement