சீரியலில் நடிக்காமல் இருப்பதற்கான காரணம் பற்றி வெளிப்படையாக மைனா நந்தினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நந்தினி.

இவர் சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர். தற்போது இவர் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருந்த சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸில் நந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை இயக்குனர் ராதா மோகன் இயக்கி இருந்தார்.
மைனா நந்தினி திரைப்பயணம்:
இதில் வாணி போஜன், நிழல்கள் ரவி, சார்லி, இளங்கோ குமரவேல், நிதின் சத்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதில் நந்தினியின் நடிப்பு பாராட்டை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து இவர் படங்களிலும், வெப் சீரிஸிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

மைனா நந்தினி குறித்த தகவல்:
இதற்கிடையில் மைனா நந்தினி அவர்கள் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இதில் இவரால் இறுதிவரை செல்ல முடியவில்லை. அதற்குப்பின் தான் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இவர் சின்னத்திரை பக்கமே வரவில்லை. இது குறித்து பலருமே கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

மைனா நந்தினி பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் மைனா நந்தினி, நான் சீரியலை விட்டு விலக வேண்டும் என்று எப்போதுமே முடிவு செய்தது கிடையாது. ஆனால், சில வருடங்களாக எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் படங்களில் நடிப்பதால் இனி சீரியலில் நடிக்க மாட்டேன் என்று அவர்களே நினைத்து விட்டார்கள் போல இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=FCLUWEtKlcw
சீரியல் பற்றி சொன்னது:
நான் பார்க்கும் அனைத்து இயக்குனரிடம், தயாரிப்பிடமும் எனக்கு வேலை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். சீரியல் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நான் எப்போதும் சீரியலில் நடிக்க கூடாது என்று ஒதுங்கியதே கிடையாது. சீரியல் தான் என்னை என்னை வாழ வைத்தது. சீரியல் மூலம் தான் சினிமா வாய்ப்பு வந்தது என்று கூறியிருக்கிறார்.






