இன்று காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பரிசுகளை பரிமாறி தங்கள் காதலை பகிர்ந்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன்- நயன்தாரா. விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா அவர்கள் சிம்பு, பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் நயன்தாரா மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும், இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி வெளிநாடு செல்வது அங்கு எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போடுவது என்று காதல் புறாக்களாகவே இருக்கிறார்கள்.
நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இல்லாமல் செல்வதே இல்லை. அதோடு இவர்களைப் பற்றி ஏதாவது ஒரு நியூஸ் கிடைத்தால் போதும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரென்டிங் ஆகிவிடுவார்கள். மேலும், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் என பலரும் இவர்களுடைய திருமணம் குறித்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதோடு இவர்களின் திருமணம் பற்றி தான் ரசிகர்கள் பலரும் ஏதாவது ஒரு புரளியை சோசியல் மீடியாவில் கிளப்பி கொண்டு வருகிறார்கள். அதற்கு விக்னேஷ் சிவன் – நயன் இருவரும் பதிலளித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று செய்திகள் பரவியது. இதுகுறித்து விக்னேஷ் ஷுவன் கூறியது,
விக்னேஷ் சிவன் – நயன் நிச்சயதார்த்தம் :
இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து இருக்கிறார்கள். ஆனாலும், நாங்கள் இருவரும் அவரவர் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது. அதனை முடித்த பின்னர் தான் திருமணம் என்று கூறி இருந்தார். இருந்தாலும் ரசிகர்கள் இதை விடுவதாக இல்லை. மேலும், கடந்த ஆண்டு நயன்தாரா-விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் மிகவும் privateஆக முடிந்தது. ஆனால், நிச்சயம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்கள்.
விக்னேஷ் சிவன் – நயன் நடிப்பில் வரும் படங்கள்:
சமீபத்தில் இவர்கள் இயக்கத்தில் வெளிவந்த ராக்கி படம் நல்ல விமர்சனத்தை மக்கள் மத்தியில் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து காத்துவாக்குல 2 காதல் படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா நடிக்கிறார் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படம், அல்போன்ஸ் புத்திரன் படம் போன்ற பல படங்களில் நயன் கமிட்டாகி நடித்து வருகிறார்.
விக்னேஷ் – நயன் வெளிநாடு சுற்றுலா:
இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர். சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன் வெளிநாட்டில் கொண்டாடினார். இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களுடைய காதலை கொண்டாடி இருக்கிறார்கள். இன்று காதல் தினத்தன்று எடுத்த புகைப்படம் வீடியோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு:
விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் நயன் உடன் இருக்கும் புகைப்படம், வீடியோ எல்லா போட்டு ‘காத்துவாக்குல ஒரு காதல்’ என கேப்ஷன் போட்டு சுற்றியுள்ள அனைத்து அன்பர்களுக்கும் காதல் தின வாழ்த்துக்கள். காதல், அதுவே இந்த வாழ்க்கையை நிறைவு செய்கிறது. எனவே காதலிக்கவும் மற்றும் நேசிக்க படுவதற்கும் நேரமும் ஆர்வமும் வேண்டும். காதலர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்து கொடுத்து கட்டித்தழுவி தன்னுடைய காதல் தின வாழ்த்துக் கூறி இருக்கிற வீடியோவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இப்படி காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மாறி மாறி தங்களுடைய காதலை பரிமாறி கொண்ட புகைப்படம் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.