பொது மேடையில் தன் காதலனை பற்றி வெளிப்படையாக பேசிய நயன்தாரா !

0
721

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பல ஆண்டுகளாக டாப் ஹீரோயினியாக இருந்து வருகிறார்.வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சிறந்த நடிகை என்ற பட்டத்தை ஏதாவது ஒரு படத்திற்காக வென்றுவிடுவார்.
முதலில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் நடித்த அறம் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

vignesh shivan

தற்போது தமிழில் அதர்வாவுடம் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் ஹிந்து வோர்ல்டு ஆப் விமென்(hindu world of women)என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.நேற்று மாலை சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு துறையில் சாதித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கபட்டது .இதில் நயன்தாராவிற்கு சினிமாவில் சாதித்த பெண் என்ற விருது வழங்கப்பட்டது.

விருதை பெற்றுக்கொண்ட நயன்தாரா விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார் மேலும்,எனது இந்த வளர்ச்சிக்கு முழு காரணமாக இருந்த எனது அம்மா, அப்பாவிற்கு நன்றி மற்றும் எனது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் எனது காதலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.