பிரபல யூடியூபர் இயக்கும் படத்தில் இணைந்த நடிகை நயன்தாரா- இயக்குனர் அவதாரம் எடுத்த நபர் யார் தெரியுமா?

0
1808
- Advertisement -

பிரபல youtuber இயக்கும் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த O2 படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் காட்ஃபாதர்,கோல்ட் படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

நயன்தாரா திருமணம்:

கடைசியாக நயன் நடிப்பில் வெளியான படம் கனெக்ட். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருக்கிறது.

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

தற்போது நயன் அவர்கள் ஜவான் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். ஷாருக்கான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதுதான் நயன்தாராவின் முதல் இந்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் நயன்தாரா கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் Y Not Studios சசிகாந்த் இயக்கும் டெஸ்ட் படத்தில் நயன் நடிக்கிறார். சசிகாந்த் அவர்கள் தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா போன்ற படங்களை தயாரித்தவர்.

-விளம்பரம்-

டெஸ்ட் படம்:

அதோடு இவர் இந்த டெஸ்ட் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். மேலும், இந்த படத்தில் மாதவன், சித்தார்த் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் தான் படக்குழு வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிரபல youtuber படத்தில் நயன்தாரா கமிட்டாகி இருக்கும் தகவல் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

youtuber இயக்கும் படம்:

பொதுவாகவே நயன்தாரா அவர்கள் இயக்குனர், தயாரிப்பாளர் என்று எதையும் பெரிதாக பார்க்க மாட்டார். அவருக்கு கதை தரமாக இருந்தால் மட்டும் போதும் சமீப காலமாகவே அப்படியான படங்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல youtuber டியூட் விக்கி இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. மேலும், இந்த படத்தின் பூஜை ஜூலை 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Advertisement