உனக்கு என்னடி அவ்ளோ வாய் கொழுப்பு, அவங்க காசுல தான் நீ துணி வாங்கி போட்ட, சோறு தின்ன – கஸ்தூரியை வெளுத்து வாங்கிய வீரலட்சுமி.

0
459
Kasthuri
- Advertisement -

நடிகை கஸ்தூரியை விமர்சித்து தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு சின்னவர், அமைதிப்படை, செந்தமிழ்பாட்டு, இந்தியன் என பல சூப்பர் ஹிட் படங்களில் கஸ்தூரி நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த கமல், பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். பின் இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை கஸ்தூரி அவர்கள் சிவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ என்ற படத்தில் குத்து விளக்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

- Advertisement -

கஸ்தூரி திரைப்பயணம்:

அந்த பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து இருந்தார் கஸ்தூரி . அதன் பின்னர் பல்வேறு பட வாய்ப்புகள் கஸ்தூரிக்கு வந்து இருக்கிறது. பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஆனால், இவரால் நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் நீடித்து நிற்க முடியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

சோசியல் மீடியாவில் கஸ்தூரி:

அதுமட்டுமில்லாமல் இவர் சமூக பிரச்சினைகள் குறித்து எப்போதும் தைரியமாக பேசி வருவார். இவர் எப்போதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று யாரையும் பார்க்காமல் துணிச்சலாக பேட்டி அளித்தும், விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக, திமுக திமுகவை இவர் வெளுத்து வாங்கி வருகிறார். இதனால் பலரும் இவர் பாஜகவின் ஆதரவாளர் என்று கூறுகிறார்கள். ஆனால், இவர் பாஜகவிலும் இணையவில்லை. அதிமுகவிலும் இணையவில்லை.

-விளம்பரம்-

கஸ்தூரி பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் கஸ்தூரி கூறியிருக்கும் கருத்து ஒன்று தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, சமீபத்தில் அளித்த பேட்டியில் இவர், இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலைகாரர்கள் என்று சொல்லியிருக்கிறார். இதை பார்த்த பலருமே கஸ்தூரிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தும் விமர்சித்தும் வருகிறார்கள். அந்த வகையில் தமிழர் முன்னேற்ற படைத்தலைவர் வீரலட்சுமி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

தமிழர் முன்னேற்ற படைத்தலைவர் வீரலட்சுமி :

அதில் அவர், இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலைகாரப் பசங்களா? முதலில் இட ஒதுக்கீடு என்றால் என்ன என்று தெரியுமா? அந்த இட ஒதுக்கீடு பெரும் கொலைகார பசங்க டிக்கெட் வாங்கும் பணத்தில் தானே சாப்பாடு சாப்பிடுகிறாய்? டிரஸ், மேக்கப் பொருட்களை வாங்குகிறார்? இந்த தமிழ் மண்ணில் சமூக நீதிக்காகவும் இட ஒதுக்கீட்டை பெறுவதற்காகவும் போராட்டம் செய்தவர்களின் வரலாறு தெரியுமா? என்னுடைய குடும்பத்தில் இந்த போட்டோவை பெறுவதற்காக 21 பேர் குண்டடிப்பட்டு வீரமரணம் அடைந்த வரலாறு தெரியுமா? இப்படித்தான் அன்று திருநங்கைகளை பற்றியும் தரைகுறைவாக விமர்சித்தார் கஸ்தூரி. ஆக, நடிகை கஸ்தூரி மூன்று நாட்களுக்குள்ளே தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் தமிழர் முன்னேற்ற படையினர் கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிடுவார்கள். தக்க பாடகத்தையும் கஸ்தூரிக்கு புகட்டுவார்கள் என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.

Advertisement