தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்ற இரண்டு மாபெரும் நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவிக்கினார் கேப்டன். என்னதான் கேப்டனை இடைப்பட்ட காலத்தில் கிண்டல் செய்தாலும் தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்பதே உண்மை.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பின்னர் தான் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் சன்டை விஜயகாந்த், விஜயுடன் நடித்த காலத்தில் இருந்தே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இதையும் படியுங்க : அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்.! சமீபத்தில் கண்டு கழித்த படம் இது தான்.!
முன்பை போல தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே மோதல் சற்று குறைந்திருந்தாலும். சமூக வலைத்தளத்தில் இன்னமும் தல-தளபதி சண்டையை தொடர்ந்து தான் வருகின்றனர். இந்நிலையில் தற்போது உடல் னால குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.
அதில், அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது என்று பதிவிட்டிருந்தார். விஜயகாந்தின் இந்த புகைப்படத்தை பார்த்து அவர் விரைவில் குணமடைந்து நாடு திரும்ப வேண்டும் என்று அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கேப்டன் விஷயத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.