தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நஸ்ரியா. தமிழில் நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. பிறகு ராஜா ராணி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர். அதற்கு பிறகு நையாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார். பின் நஸ்ரியா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் பெங்களூர் டேஸ். இந்த படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ரீமேக்காகி அந்த மொழிகளிலும் பாராட்டப்பட்டது. இது நடிகை நஸ்ரியா மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்த படம். ‘பெங்களூர் டேஸ்’ வெளியான ஆண்டிலேயே அதாவது 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியா, நடிகர் பகாத் பாஸிலை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிகை நஸ்ரியா அவர்கள் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. நடிகை நஸ்ரியா திருமணம் ஆனாலும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே இன்று வரை திகழ்ந்து வருகிறார். மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் மற்றும் ஓம் சாந்தி ஓசானா ஆகிய படங்களில் நஸ்ரியா குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு நஸ்ரியா நடித்த படங்களில் எல்லாம் அவர் குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
கிட்டத்தட்ட அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட காலத்திற்கு முன் நஸ்ரியா நடித்த எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை நஸ்ரியா அவர்கள் ஆறு வருடங்களுக்குப் பின் தன் கணவர் பகத் பாசில் உடன் இணைந்து திரைப்படத்தில் நடித்துஇருந்தார் . நடிகை நஸ்ரியா அவர்கள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது கணவர் பகத் பாசிலுக்கு ஜோடியாக மலையாளத்தில் சமீபத்தில் வெளியான “ட்ரான்ஸ்” என்ற படத்தில் நடித்துஇருந்தார்.
இந்த படத்தை பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கிஇருந்தார். நஸ்ரியா என்று சொன்னாலே அவரது எஸ்பிரேஷன் தான் நினைவிற்கு வரும் இப்படி ஒரு நிலையில் இவர் சிறு வயதில் மேடையில் ஆடிப்பாடி அசத்திய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அப்போதே செமையான எக்ஸ்பிரஷன்களை கொடுத்து அசத்தி இருக்கிறார் நடிகை நஸ்ரியா. அதே போல சிறுவதிலேயே அருமையாக பாடி இருக்கிறார்.