பிக் பாஸ்ல உங்க Ex அ பாத்தப்ப என்ன தோணுச்சி – அபிராமி கேள்விக்கு வாயடைக்கும் பதில் கொடுத்த நிரூப்.

0
569
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்று. கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி உள்ளது. கடந்த மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் முகம் தெரிந்தவர்களை விட தெரியாதவர்கள் தான் அதிகம் இருந்தார்கள். அதில் ஒருவர் தான் நிரூப். இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். மேலும், டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராகவும் நிரூப் வந்தார். நிகழ்ச்சி ஆரம்பத்தில் இவர் தனியாக விளையாடி எல்லோரிடமும் நல்ல பெயரை வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is n22.jpg

பின் போகப்போக பிரியங்காவுடன் கூட்டணி சேர்ந்து நிரூப் வீட்டில் இருகிறாரா?என்று கேட்கும் அளவிற்கு இருந்தார். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜீவ் டைட்டில் வின்னர் ஆனார். ப்ரியங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு தற்போது விஜய் டிவி பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோக்களில் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

நிரூப் – அபிராமி காதல் :

இதில் நிரூப் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அபிராமி, நிரூப்பின் காதலி என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த்துடன் நிரூப் காதலில் இருந்தது பிரேக் அப் ஆனது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே தெரியும். அதோடு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததே யாஷிகா ஆனந்த் மூலம் தான் என்று நிரூப்பே வெளிப்படையாக கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அபிராமியும் இவர் காதலில் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

niroop

அபிராமியை நாமினேட் செய்த நிரூப் :

நேற்று பிக்பாஸ் அல்டிமேட்டில் நிகழ்ச்சியில் முதல் நாளே நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்று இருக்கிறது. அதில் நிரூப் அவர்கள் அபிராமி வெங்கடாசலத்தை நாமினேட் செய்தார். பின் அதில் அவர் கூறியிருப்பது, நான் அபிராமி உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அப்போது இருந்த அபிராமி இப்போது இல்லை. அவர் நிறைய மாறி விட்டார். அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் நான் இங்க பேசவும் இல்லை. அதனால் அவரை நாமினேட் செய்கிறேன் என்று நிரூப் செய்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நிரூப்பிடம் முன்னாள் காதலி பற்றி கேள்வி கேட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

Ex குறித்து கேட்ட அபிராமி :

பிக் பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவரும் அவ்வளவாக முகம் கொடுத்து பேசவில்லை. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு அணி பிக் பாஸ் பிரபலங்கள் அணியாகவும், மற்றொரு அணி பத்திரிக்கையாளராகவும் இருந்தனர். இதில் நிரூப் பிக் பாஸ் பிரபலமாக அமர்ந்த போது பத்திரிகையாளர் அணியில் இருந்த அபிராமி ”உங்களுக்கு கன்டஸ்டண்ட் லிஸ்ட் கொடுக்கமே, உங்களோட முன்னால் காதலியை பாத்த உடனே என்ன மாதிரி இருந்துச்சி, நான் என்ன சொல்லல’ என்று கேள்வி கேட்டிருந்தார்.

Image

யாஷிகாவுடன் இருக்கும் நட்பு அபிராமியிடம் இல்லையே :

அதற்கு பதில் அளித்த நிரூப், அது நீங்க தான், ஆனா பழைய நினைவுகள் எல்லாம் வந்து போச்சி, நான் பேச முயற்சி பண்ணேன் ஆனாலும் பாப்போம், என்று பேசி முடித்தார். மேலும், நம்ம ரெண்டு பேரையும் பத்தி நெறய மீம்ஸ் எல்லாம் போட்டாங்க அதான் கேட்டேன் என்று கூறியிருந்தார் அபிராமி. அதே போல அபிராமி மட்டுமல்ல யாஷிகாவையும் நிரூப் காதலித்து பிரிந்தார். இருப்பினும் தற்போது இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால், அந்த நட்பு அபிராமியுடன் நிரூப்பிற்க்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. போக போக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement