தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் தான் அதிகம். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை நீலிமா. 1992 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
அதன் பின்னர் பல்வேறு திரைப் படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். மேலும், 30க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார்.’ நான் மகான் அல்ல’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வாங்கினார். பிறகு வழக்கம் போல் நடிகை நீலிமாவும் சின்ன துறை நோக்கி பயணம் செய்தார். இவர் நடித்த முதல் சீரியல் 1998ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற சீரியல் தான்.
அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல தொடர்களில் நடித்து உள்ளார். இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார். இவருக்கு சிறு வயதிலேயே அதாவது 21 வயதிலேயே திருமணம் செய்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் திருமணம் ஆனாலும் தொடர்ந்து தொடர்களிலும், சினிமாக்களிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார்.
மேலும், சொந்தமாக யூடுயூப் பக்கம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் தனது வீடியோவிற்கு வந்த மோசமான கமெண்டுகளை தேர்ந்தெடுத்து அதற்கு பதில் கூறியுள்ளார். அதில் ஒருவர், இங்க என்னடி பண்ற என்று கேட்டதற்கு என்னை டி என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறினார். அதே போல நீங்கள் பிராமினா, நீங்க குடிப்பீர்களா என்ற கமென்டிற்கு எல்லாம் பொறுமையாக பதில் அளித்தார்.