எனக்கு 5 மாசம், நானே இத பண்ணிட்டேன் – கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்கம் அளித்த நீலிமா. இதோ வீடியோ.

0
1426
neelima
- Advertisement -

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் ருத்தர தாண்டவத்தால் இந்தியாவில் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்படும் இறந்தும் உள்ளார்கள். இந்த நிலையில் இந்த வருடம் covid-19 தடுப்பூசி இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு அனைவரும் கட்டாயம் போட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் பலரும் கோவிட் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். மேலும், கர்ப்பிணி பெண்கள் பலரும் கோவிட் தடுப்பூசி போடுவதற்கு பயப்படுகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகை நீலிமா ராணி கோவிட் தடுப்பூசி கர்ப்பிணி பெண்கள் போடலாம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியது, மூணு மாசம் இருக்கும் போதே கர்ப்பிணிப் பெண்களும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று சொன்னார்கள். முதலில் நான் பயந்தேன். நிறைய குழப்பத்தில் இருந்தேன்.

இதையும் பாருங்க : சிம்பு கல்யாணம் பண்ண அப்புறம் தான் நான் பண்ணுவேன். பிரபல நடிகர் சபதம்.

- Advertisement -

பின் நான் எனக்கு தெரிந்த மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டேன். என்னுடைய குடும்பமும் எனக்கு புரிய வைத்தார்கள். இப்போது எனக்கு ஐந்து மாதம். இது எனக்கு இரண்டாவது குழந்தை. நான் ஐந்தாவது மாதத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். எனக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. ஊசி போட்டு நான் நல்லாத்தான் இருக்கேன். தயவு செய்து கர்ப்பிணி பெண்கள் கோவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்.

நீலிமா

அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தையின் நலத்திற்கும் மிக முக்கியம். அதனால் தான் நான் இந்த விஷயத்தை ஷேர் பண்ணேன் என்று பதிவிட்டிருந்தார். சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் நடிகையாக வலம் வந்தவர் நீலிமா ராணி. இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும், 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

-விளம்பரம்-
Advertisement