பிக் பாஸ் விஷால் பற்றி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேகா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து இருந்தார்கள். இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்கள் எல்லோருக்கும் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்தியது. இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி நேற்று தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த சீரியல் பயணம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் நிறைவடைந்தது. சாதிக்கப் போராடும் எல்லா பெண்மணிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது. மேலும், இந்த தொடரில் நடித்த ஒவ்வொரு நடிகர்களுமே இந்த தொடரின் மூலம் கிடைத்த அனுபவங்களை பற்றி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

நேகா பதிவு:
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நேகா. இவர் இந்த தொடரில் சில வருடங்கள் எழில் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஷாலை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். இன்னும் ஆயிரம் முறையும் சொல்வேன். பாக்கியலட்சுமி சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டில் இந்த ஆறு வருடங்களில் என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நபராக மாறிய ஒருவரை சந்தித்தேன்.

விஷால் பற்றி சொன்னது:
அவர் என் மோசமான நிலைகளை எல்லாம் பார்த்திருக்கிறார். என்னுடைய கஷ்டங்களின் மதியிலும் என்னுடன் நின்று இருக்கிறார். ஒரு முறை கூட அவர் என்னை விட்டுக் கொடுத்ததே இல்லை. அவர் என்னுடைய பயணத்தை கண்டது மட்டும் இல்லாமல் அதற்கு முழு மனதுடனும் இடம் கொடுத்திருக்கிறார். எனக்கு பிடித்த மனிதர். எப்போதும் அப்படித்தான் இருப்பார். அவர்தான் என் இனியாவுக்கான எழில், என் லட்டுக்கு ஏற்ற விஷால். அவர் சீரியல் இருந்து கொஞ்சம் முன்னதாகவே சென்றார். இறுதி அத்தியாயத்தை முடித்த போது எங்களுடன் இருக்க முடியவில்லை.

வாழ்த்துக்கள் விஷால்:
சில உறவுகள் திரையைத் தாண்டி ஸ்கிரிப்டுகளை தாண்டி காலத்திற்கு அப்பாற்பட்டது. அதில் இதுவும் ஒன்று. இந்த பிணைப்பு எப்போதும் என்னுடன் இருக்கும். நாம் உருவாக்கிய நினைவுகள் என் இதயத்தில் என்றென்றும் வாழும். வரும் ஆண்டுகளிலும் உங்களுக்கு நல்லது நடக்க என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவராக இருங்கள். உங்களால் முடிந்தவரை மகிழ்ச்சியை பரப்புங்கள் என்று கூறியிருக்கிறார்






