எனக்கு கொரோனா வந்துவிட்டது. இதை நினைத்து தான் பயமாக இருக்கிறது – நிக்கி கல்ராணி கவலை.

0
1001
nikki-galrani
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் தீயை போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-
சின்ன மச்சான், செவத்த மச்சான் ...

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகிய நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நானாவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமாகி வீடு திரும்பினர். சமீபத்தில்கூட பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம், நடிகர் கருணாஸ் போன்றவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் பிரபல நடிகையான நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டடுள்ளதாக அறிவித்துள்ளார். நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் 2015 ஆம் ஆண்டு ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தனக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், தற்போது அதற்காக வீட்டிலேயே தனிமைபடுத்திகொண்டதாகவும் கூறியுள்ளார். தனக்கு தொண்டையில் வலியும், காய்ச்சலும், குறைவான ருசி உணரும் தன்மையும் இருப்பதாக கூறியுள்ளார். தனக்கு கொரோனா வந்தது பற்றி பயம் இல்லை என்று கூறியுள்ள நிக்கி கல்ராணி, தனது பெற்றோர்கள் அல்லது நண்பர்களுக்கும் இந்த தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற பயம் இருப்பதாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement