லண்டன் படத்தில் ‘இந்த ஜூஸு’ யாருக்கு’ங்கிற நளினியின் வாய்ஸ் இந்த நடிகைதா.! யார் தெரியுமா.?

0
897
vadivelu

வாங்கடா என் ரெண்டு கண்ணுகளா’னு விஜயகுமார், சரத்பாபு இருவரையும் பார்த்து சொல்லுவார். அது ஷூட்டிங் என்பதை மறந்து அந்த நேரத்துல, `அப்போ நான் உங்களுக்கு முக்கியமில்லையா?’னு சிவாஜி சார்கிட்ட கேட்டு கோபப்பட்டேன். அவர் சிரிச்சுகிட்டே, `நீதான்மா என் உயிரு’னு கட்டிப்பிடிச்சு கொஞ்சினார்.”

nithya

“ `நடிச்சது போதும். இனி குழந்தைகள், குடும்பத்தை மட்டும் பார்த்துப்போம்’னுதான் சினிமாவுல நடிக்காம இருந்தேன். இப்போ பசங்க பெரியவங்களாகிட்டாங்க. அதனால இப்போ ஆக்டிவா நடிக்க முடிவெடுத்திருக்கேன்” எனப் புன்னகையுடன் பேசுகிறார் நடிகை நித்யா ரவீந்தர். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றிவருபவர்.

நடிச்சது போதும். இனி குழந்தைகள், குடும்பத்தை மட்டும் பார்த்துப்போம்’னுதான் சினிமாவுல நடிக்காம இருந்தேன். இப்போ பசங்க பெரியவங்களாகிட்டாங்க. அதனால இப்போ ஆக்டிவா நடிக்க முடிவெடுத்திருக்கேன்” எனப் புன்னகையுடன் பேசுகிறார் நடிகை நித்யா ரவீந்தர். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றிவருபவர்.

ravindhar

ஃபேமிலி லைஃப் எப்படிப் போகுது?”

“முன்பு சினிமா ஒளிப்பதிவாளராக வொர்க் பண்ணின கணவர் ரவீந்தர், இப்போ சினிமாவுல நடிச்சுக்கிட்டு இருக்கார். பொண்ணு ஜனனி ரவீந்தர், கல்யாணமாகி அமெரிக்காவுல வசிக்கிறாங்க. மகன் அர்ஜூன் ரவீந்தர், கார்ப்பரேட் ஃபிலிம் மற்றும் கான்செப்ட் வீடியோ டைரக்‌ஷன் ஃபீல்டுல இருக்கார். `ஏதாச்சும் வேலை இருக்கு’, `அவசரமா வெளிய போகணும்’ன்னா அவன் சரியா சாப்பிடமாட்டான். அதனால, அவனுக்கு இப்போ வரை பெரும்பாலும் நான்தான் சாப்பாடு ஊட்டிவிடுவேன். பெரியவனா வளர்ந்துட்டாலும், தாயாக என் மகனுக்குச் சாப்பாடு ஊட்டுறதில் சந்தோஷம்தான். என் கணவரும், மகனும் என்னை நல்லா பார்த்துக்கிறாங்க. ஆனால், `படிக்க வேண்டிய காலத்தில் படிக்காம விட்டுட்டோமே’னுதான் அடிக்கடி வருத்தப்படுவேன்.

டப்பிங் ஆர்டிஸ்டானது எப்படி?”

“ `எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் அம்பிகாவின் மகளுக்கு டப்பிங் கொடுத்தேன். யதேச்சையான அந்த வாய்ப்புக்குப் பிறகு டப்பிங் கொடுக்கலை. `அதிகச் சிரமமிருக்காது; நீங்கதான் பேசணும்’னு பி.வாசு சார் சொல்ல, `என் தங்கச்சி படிச்சவ’ படத்தில் ரூபினிக்கு டப்பிங் கொடுத்தேன். பிறகு நிறைய நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துட்டு இருந்தேன். `லண்டன்’ படத்துல, `இந்த ஜூஸூ யாருக்கு. சொல்லாதையெல்லாம் செய்’னு வடிவேலுவைப் பார்த்து நளினி பேசுற டயலாக் ரொம்ப ஃபேமஸ். 90-களிலிருந்து இப்போ வரை சினிமா, சீரியல், விளம்பரம்னு நளினிக்குத் தொடர்ச்சியா நான்தான் டப்பிங் கொடுத்துட்டு இருக்கேன். நடிப்பு அவங்களோடது; வாய்ஸ் என்னோடது. சீமா அக்காவுக்கும் நான்தான் டப்பிங் கொடுக்கிறேன்.