சினிமாவில் நமக்கு பல நடிகர் நடிகைகளை பார்த்து பரவசம் அடைத்திருப்போம். ஆனால், அவர்களை போலவே உள்ள ஒருவரை நாம் நேரில் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். உலகத்தில் ஒரே மாதிரி 7 பேர் இருப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருப்போம். அப்படியாக, தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நிவேதா பெத்துராஜ் போலவே ஒரு பெண் இருக்கிறார். அவரால், நிவேதா பெத்துராஜ் ஒரு தர்ம சங்கடத்தில் கூட சிக்கி இருந்தார். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் 2016 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன்,பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இறுதியாக இவர் விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தற்போது தமிழில் பொன் மாணிக்கவேல், பார்ட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழை விட இவருக்கும் தெலுங்கில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் கூட நிவேதா பெத்துராஜின் பெயரை ரசிகர் ஒருவர் தனது கையில் பச்சை குத்தி கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்த மாடல் அழகியான பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதனை கண்டு பலர், அது நிவேதா பெத்துராஜின் புகைப்படம் என்று கூறி சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர். ஆனால், உண்மையில் அது நிவேதா பெத்துராஜ் கிடையாது, அவருடைய பெயர் வர்ஷினி பாக்கள், அவர் ஒரு மாடல் அழகி என்பது பின்னர் தான் தெரியவந்தது. அந்த சமயம் இது குறித்து விளமளித்த நிவேதா பெத்துராஜ், சில ஊடகங்கள் சில யாரோ ஒருஆர்ட்டிஸ்ட்டின் படங்களை தொடர்ந்துபகிர்ந்து எனது பெயரைப் பயன்படுத்துகின்றன, இதனால் அந்த படத்தில் நான் தான் காணப்படுகிறேன் என்ற தோற்றத்தை உருவாக்கியது. நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் பல அழைப்புகளால் இது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
எனது படத்தை கெடுக்கும் இந்த வேண்டுமென்றே முயற்சி என்னை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. இந்த சிக்கலைக் கையாள எனது சட்டக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறேன். ஊடகங்கள் மீது எனக்கு இருக்கும் பாரிய மரியாதையை கருத்தில் கொண்டு, நான் கண்ணியமான மனத்தைக் கடைப்பிடித்தேன். ஆனால் இந்த பொறுப்பற்ற செயலிலிருந்து ஓய்வு இல்லை என்று தெரிகிறது, சம்பந்தப்பட்ட கலைஞரின் செய்திகளையும் படங்களையும் சரிபார்த்து எடுத்துச் செல்லுமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.