SELFIE எடுக்க வந்த ரசிகை, NO சொன்ன நிவேதா தாமஸ், என்ன காரணமா இருக்கும்?- வைரல் வீடியோ இதோ

0
111
- Advertisement -

நடிகை நிவேதா தாமஸ், செல்பி எடுக்க வந்த நடிகையை வேண்டாம் என்று கூறியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது‌. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு நடிகைகள் இப்போது கதாநாயகிகளாக கலக்கி கொண்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் ‘மை டியர் பூதம்’. இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

குறிப்பாக இவர் குழந்தை நட்சத்திரமாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘குருவி’ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். அதற்குப் பிறகுதான் ஜெய் நடிப்பில் வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நிவேதா என்ட்ரி கொடுத்தார். பின்னர் தமிழில் இவருக்கு கதாநாயகியாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

நிவேதா தாமஸ் திரைப்பயணம்:

அதைத்தொடர்ந்து, இவர் உலகநாயகன் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’படத்தில் கமலின் மகளாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தர்பார்’படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் என்பது குற்றத்தக்கது.

நிவேதா நடிக்கும் படங்கள்:

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘சாகினி டாகினி’ என்ற தெலுங்கு படமும், ‘எந்தாடா சஜி’ என்ற மலையாள படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர், ’35 -சின்ன கத காது’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் நந்த கிஷோர் இமானி இயக்கியுள்ளார். நாளை செப்டம்பர் 6 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடத்தப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

35- சின்ன கத காது:

இந்த நிகழ்ச்சியில் படக் குழுவினர்களோடு சேர்ந்து நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். முக்கியமாக பிரபல ஹீரோக்கள் நானி மற்றும் ராணா டகுபதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நிவேதா தாமஸ், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். மேலும், படத்தில் சரஸ்வதி என்கிற யதார்த்தமானா ரோல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்று பேசியிருந்தார்.

செல்பிக்கு நோ சொன்ன நிவேதா:

பின், மற்ற பிரபலங்கள் பேசும் போது தனது இருக்கையில் நிவேதா அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ரசிகை வந்து ஒரே ஒரு செல்பி எடுத்துக் கொள்கிறேன் என்பது போல் நிவேதா தாமஸிடம் கேட்டிருந்தார். அதற்கு நிவேதா, ஏதோ சில காரணங்கள் கூறி செல்பிக்கு நோ சொல்லி இருக்கிறார். தற்போது நிவேதா தாமஸின் இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் கூட, உடல் எடை அதிகரித்து, திடீரென அடையாளம் தெரியாத அளவிற்கு தோற்றம் அளிப்பதாக நிவேதா தாமஸின் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement