படு குண்டாக இருந்த பூர்ணாவா இது. திடீல்னு என்ன இவ்ளோ ஒல்லி ஆகிட்டாங்க.

0
26966
poorna
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பூர்ணா. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். மேலும், இவர் முதன் முதலாக 2008ல் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும்,இந்த படத்தில் பரத், வடிவேலு மற்றும் பொன்வண்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகை பூர்ணா அவர்கள் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன் என பல படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பூர்ணா அவர்கள் திரைக்குள் நுழைந்து 10 வருடங்கள் ஆகிறது. ஆனால், அவரால் முன்னணி நடிகையாக திகழ முடியவில்லை. இருந்தாலும் இவர் பல படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார்.

-விளம்பரம்-

அதோடு ஒரு சமயத்தில் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் தற்போது அவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதுமட்டும் இல்லாமல் பட வாய்ப்புக்காக இவர் சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தில் வில்லனுக்கு மனைவியாக மொட்டை அடித்துக் கொண்டு நடித்து இருந்தார். மேலும்,நடிகைகள் யாரும் எப்படி செய்ய முடியாத அளவிற்கு விஷயத்தையும் செய்தார். ஆனால், எல்லாமே வீணாகப் போய் விட்டது. அதோடு அந்த படமும் தோல்வியில் தான் போய் முடிந்தது. இதனை தொடர்ந்து தற்போது இவருக்கு ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்து உள்ளது. ஆனால், நடிகை பூர்ணா அவர்கள் ஒரு ஹீரோயினியாகத் தான் நடிப்பேன் என்று வந்த எல்லா வாய்ப்பையும் மறுத்து வருகிறார்.

இதையும் பாருங்க : என்னது இத்தனை கோடியா. ஹ்ரித்திக்கின் சம்பளத்தை கேட்டு ரத்தம் கக்கும் தயாரிப்பாளர்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை பூர்ணா அவர்கள் புசுபுசுவென, அழகாக சப்பியாக இருந்தார். தற்போது தனது உடல் எடையை குறைத்து ரொம்ப ஸ்லிம்மாக மாறி உள்ளார். மேலும், அவர் ஒரு அழகான கருப்பு நிற புடவையை கட்டிக் கொண்டு ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்நிலையில் இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் நம்ம நடிகை பூர்ணா- வா!! என்று ஆச்சரியத்திலும் உள்ளனர். மேலும், இவர் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வீட்டில் சும்மா தான் உள்ளாராம். அதனால் இவர் சினிமாவை நம்பி புரோஜனம் இல்லை என்று நடனப்பள்ளி ஆரம்பிக்கலாம் என்று நினைத்து உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. இவர் முறைப்படி கிளாசிக் நடனத்தை கற்று உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், அதில் அவர் ஆங்கில இலக்கியமும் கற்று உள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அது மட்டுமில்லாமல் இவர் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வதற்காக வெஸ்டர்ன் நடனத்தையும் கற்க ஆரம்பித்து உள்ளார். பின்னர் படிப்படியாக எல்லா முறை நடனங்களையும் கற்றுக் கொண்டாராம். இப்போது பெங்களூரில் குச்சிப்புடி நடனம் தொடர்பாக பிஎச்டி படித்து வருகிறாராம். மேலும்,நடிப்பும் நடனமும் எனது இரு கண்கள் என்று நடிகை பூர்ணா அவர்கள் அடிக்கடி சொல்வாராம். அதுமட்டுமில்லாமல் இவருடைய சின்ன வயதுக் கனவே நடனப்பள்ளி ஆரம்பிப்பது தானாம். மேலும், அவருடைய மாணவர்கள் அனைவருக்கும் அவரே நடனம் சொல்லிக் கொடுப்பது தான் கனவு என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் முறையாக எல்லா நடனம் கற்றுக் கொண்டு நடிகை சோபனா போல நடனப்பள்ளி ஆரம்பிக்கப் போகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement